sadhuragiri and me - சதுரகிரியும் நானும் -1


சதுரகிரி சந்தன மகாலிங்கம் திருக்கோயில் நுழைவாயில் 🙏

ஓம்  நமசிவாய 🙏 "சதுரகிரியில் யாம்" என்ற இந்த தொடரை எழுதுவதற்கு முன்பாக சதுரகிரிக்கு யாம் எப்படி சென்றோம்? எது எம்மை தூண்டியது! என்பதை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.

 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் எழுதிய சொர்ண ரகசியம் என்ற புத்தகத்தை வாங்கினேன் ஆனால் அந்தப் புத்தகத்தை படிக்க நேரம் கிடைக்காமல் அதை அப்படியே வைத்திருந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் தான் அந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தேன். அவ்வளவு சுவாரசியமான புத்தகம்.

கதை சுருக்கம்: 

கடவுள் பக்தி துளியும் இல்லாத ஒருவர்! கடவுளை வணங்குபவர்களை முட்டாள்கள் என்று கருதும் நபர். அவர் ரிப்போர்டராக பணிபுரிகிறார் அலுவலகப் பணியின் காரணமாக அதாவது சதுரகிரி பற்றி ஒரு ஆர்டிகள் எழுதுவதற்காக கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த ரிப்போர்ட்டர் சதுரகிரிக்கு வருகிறார் .

 ஒரு சிவனடியார் 99 அமாவாசை தொடர்ந்து சதுரகிரி செல்லும்  இவர் ... இப்பொழுது போகும் அம்மாவாசையுடன் நூறாவது அமாவாசை ஆகும். அவர் என்ன வேண்டுகிறார் என்றால் இதுதான் நான் வரும் கடைசி அமாவாசை இதன் பிறகு நான் உங்களை காண வர முடியாது சுந்தர மகாலிங்கா, சந்தன மகாலிங்கா... என்னை மன்னித்து விடுங்கள் நான் மரணிக்க போகிறேன் என்று கடவுளை வேண்டுகிறார்.

 சதுரகிரியில் பல ஆண்டுகளாக மூலிகை தைலக்கிணற்றை  தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒரு கேரள நம்பூதிரி. அவரிடம் உதவியாளராக இருக்கும் நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படியாவது நம்பூதிரிக்கு பணிவிடைகள் செய்து அவர் அடையும் அந்த தைல கிணறு ரகசியங்களை தெரிந்து கொண்டு நாமும் அதைக் கொண்டு பெரிய ஆளாக வேண்டும் அதாவது பொன் பொருள் சேர்க்க வேண்டும் என்று விரும்பும் ஒருவர்.

இந்த நம்பூதிரி இடம் உதவியாளராக இருப்பவரை தேடிவரும் அவரது உறவினர்கள் மூவர் இவர்கள் நம்பூதிரி உதவியாளரை கண்டுபிடித்து என்ன ஆனார்கள் என்பது ஒரு கதை.

கடவுள் நம்பிக்கையே இல்லாத ரிப்போர்டரும் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கையுடன் வாழும் அந்த சிவ பக்தரும் சதுரகிரியில் ஒரு இடத்தில் இணைவார்கள் அப்படி இணைந்ததற்கு பிறகு இவர்கள் இருவரின் வாழ்க்கையில் என்ன நடந்தது சிவ பக்தர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது பிரச்சினைகள் எப்படி சரியானது என்பது ஒரு கதை.

அந்த ரிப்போர்டருக்கு கடவுள் நம்பிக்கை வந்ததா? இல்லையா? என்பதெல்லாம் சுவாரசியத்தின் உச்சம்! 

இதுதான் ஸ்வர்ண ரகசியம் புத்தகத்தின் கதை சுருக்கம்.

 படித்த மாத்திரத்தில் ஏதோ ஒரு விஷயம் என்னை தூண்டியது "சதுரகிரிக்கு போ" சதுரகிரிக்கு போ" என்று யாரோ என் தலை உள்ளே புகுந்து மூளைக்குள் சென்று என் காதுகளில் கேட்கும் படி சொல்லிக் கொண்டே இருந்தார்கள் "சதுரகிரி போ" சதுரகிரி போ" என்று மறுபடியும் மறுபடியும் அந்த வார்த்தை என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது அதற்கு முன்பு வரை நான் சதுரகிரி பக்கம் போனதும் இல்லை சதுரகிரி போகும் எண்ணமும் எனக்கு வந்தது இல்லை .

பிறகு மெல்ல சதுரகிரி பற்றி விசாரிக்கத் தொடங்கினேன் சதுரகிரி பற்றி யாரை விசாரிப்பது என்று யோசிக்கும் போது எமது தம்பி ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு சதுரகிரி சென்றதாகவும் அங்கே பல விஷயங்கள் அவருக்கு கிடைத்ததாகவும் என்னிடம் ஒரு முறை கூறி இருந்தது எமக்கு நினைவிற்கு வந்தது.

 அவரை தொடர்பு கொண்டு "தம்பி நான் சதுரகிரிக்கு செல்லலாம் என்று இருக்கிறேன் நீங்களும் வருகிறீர்களா?" என்று முதலில் கேட்டேன் அவர் மறுத்துவிட்டார் அவர் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் அவரால் வர முடியவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறிவிட்டார். சரி தம்பி எனக்கு எப்படி செல்ல வேண்டும்?  வழி கூறு? அங்கே தங்குவதற்கு இடம் இருக்கிறதா? இல்லையா?  ஒரு நாளில் வந்து விடலாமா? அல்லது இரண்டு மூன்று நாட்கள் ஆகுமா? சென்னையிலிருந்து எப்படி? எந்த? நேரத்தில் கிளம்ப வேண்டும்? இதுபோன்று பல விஷயங்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். 

அனைத்துக்கும் விடையளித்த அவர் "அண்ணே நான் சதுரகிரி செல்லும்போது எந்த தடையும் இல்லை. எந்த பரிசோதனைகளும் இல்லை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை! என்று கேள்விப்பட்டேன் அமாவாசை அன்றும், பௌர்ணமி அன்று மட்டும் தான் மேலே அதாவது சதுரகிரி மலை மேலே செல்ல அனுமதி கொடுக்கிறார்கள் அதனால் நீங்கள் சதுரகிரி தொடர்புடைய யாரிடமாவது அதாவது தற்பொழுது சென்று வந்த யாரிடமாவது இன்னும் சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அப்போதுதான் நீங்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும் முன்பு போல எப்பொழுது வேண்டுமானாலும் சதுரகிரி செல்ல இப்பொழுது இயலாது" என்று  கூறினார்.

இது என்னடா புது வம்பாக இருக்கிறது! என்று மனதில் நினைத்தபடியே இப்போது யாரிடம் கேட்பது? யார் சதுரகிரிக்கு சமீபத்தில் சென்று வந்தவர்கள்? என்று என் மனதை போட்டு குழப்பிக் கொண்டே இருந்தேன். 

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ... நம் தம்பியே மீண்டும் என்னை தொடர்பு கொண்டு "அண்ணா சதுரகிரி தொடர்பான குழுக்கள் நிறையவே பேஸ்புக்கில் இருக்கிறது நீங்கள் பார்த்து ஏதாவது ஒரு குழுவில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் பிறகு அவர்களை தொடர்பு கொண்டு சதுரகிரிக்கு இப்பொழுது வரலாமா? இல்லையா? என்று கேட்டால் அதில் உள்ள யாராவது உங்களை தொடர்பு கொண்டு அனுமதி அளிக்கிறார்களா? இல்லையா? எந்த தினத்தில் அனுமதி அளிக்கிறார்கள் போன்ற விவரங்களை கொடுப்பார்கள்" என்று கூற எனக்கு வழி கிடைத்தது. 

தம்பி கூறியது போலவே பேஸ்புக்கில் இருக்கும் சில குழுக்களில் நம்மை இணைத்துக் கொண்டு தொடர்பு கொண்டேன் அப்பொழுது ராஜா என்பவர் நமக்கு வழிகாட்டியாக இருந்து சதுரகிரியில் இருக்கும் ஒருவரின் மொபைல் நம்பரையும் கொடுத்து இவரிடம் பேசுங்கள் என்று உதவினார். நான் அப்படியே செய்யும் பொழுது ஒரு செய்தி எனக்கு தெளிவாக கிடைத்தது அதாவது ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மட்டுமே சதுரகிரி மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது அதுவும் அமாவாசைக்கு நான்கு நாட்களும், பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் மட்டுமே அனுமதி உண்டு என்பதும், அதற்குப் பிறகு அந்த குறிப்பிட்ட நாட்களில் மழை வரும் பட்சத்தில் அந்த அனுமதியும் மறுக்கப்படும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

சென்னையில் இருந்து பேருந்தில் செல்வதானால் ஒன்று மதுரையில் இறங்கி மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் பேருந்து ஏறி கிருஷ்ணன் கோவில் ஸ்டாப்பிங் என்று இறங்கி அங்கிருந்து ஆட்டோ அல்லது பஸ்ஸிலோ வத்திராயிருப்பு வழியாக தானிப்பாரை சென்று விட்டால் அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் சதுரகிரி மலை அடிவாரம் வந்துவிடும் என்பது தெரிந்தது.

 மற்றொன்று சென்னையில் இருந்து நேரடியாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்தில் பயணம் செய்யும்பொழுது கிருஷ்ணன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கிவிடலாம் ஒரே பஸ் சென்னையிலிருந்து கிருஷ்ணன் கோயிலுக்கு அதேபோல கிருஷ்ணன் கோயிலில் இருந்து வத்திராயிருப்பு வழியாக தானிப்பாரை சென்று விட்டால் நமக்கு சதுரகிரி மலை அடிவாரம் வந்துவிடும் அதன் பிறகு நடந்தே சென்றுவிடலாம் என்ற தகவலும் மெல்ல கிடைக்கப்பெற்றோம். 

சதுரகிரி செல்வதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தேன்...🙏 


                                             தொடரும்...... 

SS.இராமச்சந்திரன் 
Shiva Vishnu Tv 

கீழே பேஸ்புக்கில் பதிவேற்றிய சதுரகிரி தொடர்பான வீடியோக்களின் லிங்குகள் வரிசையாக கொடுக்கின்றேன் சதுரகிரி பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் அன்பர்கள் கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும். ஓம் நமசிவாய 🙏











My YouTube channel


My Facebook page







Comments