Shiva Vishnu Tv introduction ( சிவா விஷ்ணு டிவி அறிமுகம் மற்றும் எங்கள் நோக்கம்)



அனைவருக்கும் வணக்கம்


 நம் தமிழகத்தில் நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்களிடம் இல்லாத திறமைகள் எதுவும் இந்த உலகில் இல்லை. அதிலும் குறிப்பாக சித்தர்கள் என்பவர்கள் செய்த வித்தைகள், மருத்துவம், சாகசங்கள், அதிசயங்கள் போன்றவற்றை இப்பொழுது உள்ள அறிவியலால் கூட செய்ய முடியாது! அப்பேர்ப்பட்டவர்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணில் தான் நாமும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.

<!--more-->


  அவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர்களை இங்கே எவ்வளவு பேருக்கு தெரியும் என்பது பெரிய கேள்விக்குறி? சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், மாரியம்மன், காளியம்மன், துர்கா தேவி, பிரம்மா மற்றும் சில கடவுள்களின் பெயர்களை மட்டுமே நமக்கு தெரியும் அதன் பிறகு ஐயனாரப்பன், முனீஸ்வரன், போன்ற கடவுள்களையும் நமக்கு தெரியும் இவர்களைத்தான் நாம் கோயில்களுக்கு சென்று வணங்குகின்றோம்.

பொதுவாக சித்தர்கள் என்பவர்கள் நேரடியாக கடவுளிடம் தொடர்பு உடையவர்களாகவே ஆன்மீகவாதிகளால் பார்க்கப்படுகிறது. சித்தர்களின் ஜீவ சமாதியில் அவர்கள் உயிருடன் இருப்பதாகவே இப்பொழுதும் நம்பப்படுகிறது. ஆகவே நாம் சாதாரணமாக செல்லும் கோயிலுக்கு சென்று மூல ஸ்தானத்தில் உள்ள கடவுளைப் பார்த்து அங்கே வேண்டுவதை விட, சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதியான இடத்தில் சென்று நாம் நம் மனதில் உள்ளவற்றை வேண்டினால் அவர்கள் அதைக் கேட்டு கடவுளிடம் நேரடியாக எடுத்து சொல்வார்கள் என்று  நம்பப்படுகிறது! 



ஆக நம்முடைய சிவா விஷ்ணு டிவி....  சித்தர்கள் என்றால் யார்? சித்தர்கள் என்ன செய்தார்கள்? சித்தர்கள் எத்தனை பேர்? இங்கே வாழ்ந்தார்கள் சித்தர்கள் எங்கெங்கே சென்று தவம் செய்தார்கள்? சித்தர் வழிபாடு என்றால் என்ன? போன்ற பல விளக்கங்களையும் அவர்கள் வாழ்ந்த பல தலங்களுக்கும், கோவில்களுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும் சென்று உங்களை சித்தர் வழிபாட்டில் ஈடுபடச் செய்வதே எங்கள் நோக்கம்.  

எங்கள் நோக்கத்தின் முதல் முயற்சியாக தென் கைலாயம் எனப்படும் தமிழகத்தில் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள "சதுரகிரி" என்ற பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே உள்ள புனிதங்களையும், அங்கே வாழ்ந்த சித்தர்களையும், சித்தர்கள் வாழ்ந்த குகைகளையும், மற்றும் சதுரகியின் வரலாறையும் மக்களுக்கு எடுத்து சொல்ல ஆரம்பித்து உள்ளோம் அந்த வகையில் எங்கள் இன்னொரு நோக்கம் சதுரகிரியின் அனைத்து செய்திகளையும் சேகரித்து அவற்றை "சதுரகிரி தெரிந்ததும் தெரியாததும்" என்ற பெயரில் ஆவணப்படமாக இயக்கம் முயற்சியில் உள்ளோம் சமூக வலைதளங்களில் சதுரகிரியின் பெருமைகளையும் சதுரகிரியின் அழகியலையும் Shiva Vishnu Tv என்ற பெயரில் உள்ள Facebook page -ல் அவ்வப்பொழுது பதிவிட்டு வருகிறோம். சதுரகிரி தொடர்பான ஒரு தெளிவான புத்தகத்தை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளோம். இந்த முயற்சி வெற்றி அடைந்த பிறகு ஒவ்வொரு பகுதியாக சென்று அந்த இடத்தின் பெருமைகளும் அருமைகளையும் ஆவணப் படங்களாகவும், புத்தகங்களாகவும், சமூக வலைதளங்களில் பதிவுகள் ஆகவும் இடுவதற்கு தயாராக உள்ளோம் 

 இதன்... நீட்சியாக கொல்லிமலை, பர்வதமலை, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி மலை, மருதமலை, பொதிகை மலை இன்னும்  எங்கெங்கெல்லாம் சித்தர்கள் சென்று வழிபட்டார்களோ? எங்கெங்கெல்லாம் சித்தர்கள் ஜீவசமாதிகள் உள்ளதோ? அவைகள் அனைத்தையும் மக்களான உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும்....பாடலில் இடம் பெற்ற சிவ திருத்தலங்களான 274 திருத்தலங்களை பற்றிய தகவல்கள் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 108 வைணவ திவ்ய தேசங்களான வைணவ திருத்தலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 18 சித்தர்களின் வாழ்க்கையையும் அவர்கள் செய்த சாகசங்களும் அவர்கள் மக்களுக்கு ஆற்றிய அரும் பணிகளையும் அவர்கள் கண்டுபிடித்த மூலிகை மருத்துவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறுகளை குறும்படங்களாக எடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும்.

 நாம் பிறந்து, வாழ்ந்து, இறக்கும் பொழுது நாம் என்ன செய்தோம்? என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது திருமணம் செய்தோம், இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றோம், அவர்களை படிக்க வைத்தோம், அவர்களுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்தோம், அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தோம், பிறகு காலம் போன போக்கில் இறந்து சுடுகாட்டிற்கு சென்று விட்டோம் என்று இல்லாமல் எஸ் எஸ் ராமச்சந்திரனாகிய யாம் ஏதாவது ஒரு விஷயத்தை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற ஒரு சிறு முயற்சியே இந்த சிவா விஷ்ணு டிவி ஆகும்.

உங்களின் ஆதரவு எமக்கு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையில் சர்வம் சிவார்ப்பணம்!!! சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று என் பயணத்தை தொடங்குகிறேன்



 🙏ஓம் நமசிவாய🙏 ஓம் நாராயணாய🙏

Shiva Vishnu Tv 



 

Comments