63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் -பகுதி -7 அமர்நீதி நாயனார் 63 nayanmars

63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி- 7
அமர்நீதி நாயனார் 

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் நீங்கள் அமர்நீதி நாயனார் பற்றிய வரலாறு பார்க்கலாம் 🙏

ஒரு கோவணத்துக்காக தான் வைத்திருந்த மொத்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்து அடுத்து மனைவி குழந்தையையும் இழந்து இறுதியில் தன்னையே இழக்க நேரிடும் போது ஒரு மனிதன் என்னதான் செய்வது?  என்ன புரியவில்லையா?  இதுதான் அமர்நீதி நாயனார் அவர்களின் வரலாற்று சுருக்கம்...

 அமர்நீதி நாயனார் வரலாற்றை நோக்கி செல்வோம்... Shiva Vishnu Tv 

சிறந்த வியாபாரியாக விளங்கிய அமர்நீதி நாயனார் நல்ல வசதியான வாழ்க்கையை தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இப்படி பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தாலும் தம் வாழ்நாளில் ஒரு நாள் தவறாமல் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.. 

சிவனடியார்கள் வந்து தங்குவதற்கான மடம் ஒன்றை உருவாக்கி அதில் வரும் சிவனடியார்கள் அனைவருக்கும் உணவு, உடை, கோவணம் போன்றவற்றை சிறப்பாக கொடுத்து சிவ தொண்டு ஆற்றினார்...‌‌ 

இப்படி எந்த குறையும் இல்லாமல் அழகாக சென்றுகொண்டிருந்த இவர் வாழ்க்கையில் சிவபெருமான் தன் திருவிளையாடலை ஆரம்பித்தார்... 

சிவபெருமான் ஒரு நாள் அந்தணர் வேடம் பூண்டு அமர்நீதி நாயனார் நடத்தும் மடத்தை அடைந்தார்...‌‌சிவனடியாரை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அமர்நீதியார் " ஐயா வாருங்கள்... உங்கள் வருகையால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்... வாருங்கள் சாப்பிடலாம்"  என்று அழைக்க ...‌  அதற்கு சிவபெருமான்" யாம் குளிக்காமல் உணவு உண்பதில்லை யாம் காவிரியில் சென்று நீராடிவிட்டு வருகிறோம் அதுவரை இந்த கோவணத்தை பத்திரமாக வைத்திருங்கள்"  என்று கூறிவிட்டு சிவனடியார் வேகமாக சென்றுவிட்டார்... அமர்நீதியார் அந்த கோவணத்தை பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டு தமது வேலைகள் மீது கவணம் செலுத்தினார்... Shiva Vishnu Tv 

சில மணித்துளிகள் கழித்து... மழையில் நனைந்து கொண்டே வந்த சிவனடியார் அமர்நீதியாரை பார்த்து "ஐயா தாங்களிடம் எமது கோவணத்தை பத்திரமாக வைத்திருக்க சொல்லி கொடுத்து விட்டு சென்றேன் அல்லவா? அந்த கோவணத்தை எடுத்து வாறும்" என்று உடல் நடுங்கியபடி தேய்க்க... விரைவாக உள்ளே சென்று அமர்நீதியார் தான் வைத்திருந்த இடத்தில் கோவணத்தை பார்க்க அங்கே கோவணம் மாயமாய் மறைந்திருந்து... அமரநீதியார்க்கு ஒன்றும் புரியவில்லை..‌‌எங்கெங்கோ தேடி பார்த்தும் கோவணத்தை காணவில்லை... இறுதியாக அமர்நீதியார் ஒரு புதிய கோவணத்தை கொண்டு வந்து சிவனடியாரை பார்த்து... ஐயா தாங்கள் எம்மிடம் கொடுத்து சென்ற கோவணத்தை காணவில்லை... அதனால் யாம் உங்களுக்கு புதிதாக ஒரு கோவணத்தை கொண்டு வந்துள்ளோம்... இந்த கோவணம் துணியில் இருந்து கிழித்தது இல்லை... புதிதாக நெய்யப்பட்ட கோவணம்..‌‌ஈரத்துடன் இருக்கும் கோவணத்தை களைந்து இந்த புதிய கோவணத்தை அணிந்து அடியேனின் குற்றத்தை மன்னித்துவிடுங்கள்" என்று பவ்யமாக கேட்க... Shiva Vishnu Tv 

இதனை கேட்ட அடுத்த நொடி... சிவனடியார் கடுமையான கோபத்துடன் " நீர் பெரிய தவறு செய்து விட்டீர்கள் எமது கோவணத்தை பொறுப்பில்லாமல் தொலைத்துவிட்டு எம்மிடம் வேறு கோவணத்தை தருகிறீர்கள்...‌‌‌‌‌  இதோ யாம் வைத்திருக்கும் இந்த கோவணமும் உம்மிடம் யாம் கொடுத்து சென்ற கோவணமும் ஒரே எடையுடையவை ( தன் கையில் இருக்கும் கோவணத்தை அமர்நீதியாரிடம் கொடுத்த வாரே) இந்தா இந்த கோவணத்தின் எடைக்கு சரியாக ஒரு கோவணத்தை கொடு பார்ப்போம் " என்று கூற.. 

அமர்நீதியார் சிவனடியார் கொடுத்த கோவணத்தை தராசு தட்டில் ஒரு பக்கமும் தான் வைத்திருந்த கோவணத்தை மறுபக்கத்தில் வைக்க.... அடியார் கோவணம் இருக்கும் பக்கம் கீழேயும் அமர்நீதியார் புதிய கோவணம் இருக்கும் பக்கம் மேலேயும் இருக்க... 

அமர்நீதியார் தான் பல அடியார்க்கு கொடுக்க வைத்திருந்த கோவணங்களை வைக்க அப்போதும் எடை சமமாக இல்லை.. ஒட்டுமொத்த கோவணம் மற்றும் ஆடைகள் அனைத்தையும் வைத்தும் அடியாரின் கோணத்தின் எடைக்கு சமமாக வரவில்லை... 

அடுத்து... இதுவரை தான் சம்பாதித்த மொத்த செல்வங்களையும் தராசு தட்டில் வைக்க இப்போதும் அடியாரின் கோணத்தின் எடைக்கு சமமாக வரவில்லை... Shiva Vishnu Tv 

அடுத்து... தனது மனைவி மற்றும் குழந்தையையும் தராசு தட்டில் வைக்க இப்போதும் அதே நிலைதான்... 

இறுதியாக தானே அந்த தராசு தட்டில் ஏறி உட்கார ... இப்போது மெல்ல இரு தட்டுகளும் சமமாக இருக்கிறது 🙏 

அடியாராக வந்த இறைவன் அமர்நீதியார் மற்றும் அவரது மனைவி குழந்தைக்கு காட்சி கொடுத்து அவர்களுக்கு சிவ லோகத்தில் இடம் கொடுத்தார் 🙏

Shiva Vishnu Tv 🙏


Comments