63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 8 எறிபத்த நாயனார் 63 nayanmars



63 - நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -8
எறிபத்த நாயனார் 

 சிவனடியார் எவருக்காவது பிரச்சினை என்றாலும் அல்லது சிவ பூஜையில் எவராவது இடையூறு செய்தாலும் அவர்களை தான் வைத்திருக்கும் மழுவாயுதத்தால் வெட்டி கொன்றுவிட்டு தான் அடுத்த வேலையை நோக்கி செல்வாராம் இந்த எறிபத்தர் எனும் எறிபத்த நாயனார் 🙏 

அந்த அளவிற்கு சிவபெருமானை தன் உயிராகவும் சிவனடியாரை அதற்கும் மேலாகவும் நேசித்தவர் இந்த எறிபத்தர் நாயனார் 🙏 

இப்படி அழகாகவும், பக்தியுடனும் சென்ற இவரது வாழ்க்கை சிவபெருமானின் திருவிளையாடல்கள் மூலம் ஒரு நாள் என்னவாயிற்று என்பதன் சுருக்கமே இந்த பதிவு.. Shiva Vishnu Tv 

கருவூரில் பிறந்த இவர் சிவனே என்று மேற்குறிப்பிட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்த சமயம்... அதே பகுதியில் சிவகாமியாண்டர் எனும் வயது முதிர்ந்த அடியார் ஒருவரும் வாழ்ந்து வந்தார்... அவர் தினமும் குளித்துவிட்டு புதிய மலர்களை பறித்து அந்த மலர்களை கொண்டு சிவபெருமானை வணங்கி வாழ்ந்து வந்தார்... 

ஒரு நாள் வழக்கம் போல் சிவகாமியாண்டர் தன் கூடையில் நிரம்பிய பூக்களை எடுத்துக் கொண்டு திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தார்... 

அப்பொழுது.... அங்கே பட்டத்து யானை மிகுந்த அலங்காரத்துடன் மிக வேகமாக பாகணின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஓடி வந்து கொண்டிருந்தது... ஒரு ஓரத்தில் சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டரின் கையில் வைத்திருந்த பூ கூடையை தள்ளிவிட்டு சென்றது.... பூக்கூடை கீழே விழுந்தது... அதிலுள்ள பூக்கள் அனைத்தும் தரையில் சிதரியதை கண்டு கடும் கோபமடைந்த சிவகாமியாண்டர் யானையின் பின்னால் சிறிது தூரம் ஓடி யானையை அடிக்க முற்பட்ட போது அவரது வயோதிகம் ஒத்துழையாமல் .. ஒரு ஓரத்தில் நின்று சிவா.... சிவா ... சிவா .,‌‌ என்று அழுதபடி இருக்க.... 

சிறிது தூரத்தில் இருந்த எறிபத்தர் காதில் சிவகாமியாண்டரின் குரல் கேட்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்து... அங்கே என்ன நடந்தது என்று கேட்டறிந்து... மிகுந்த கோபத்துடன் யானை எத்திசையில் சென்றதோ அத்திசையை நோக்கி வேகமாக ஓடினார்... Shiva Vishnu Tv 

பட்டத்து யானை கண்ணில் பட்ட அடுத்த நொடி தன் கைகளில் வைத்திருந்த மழுபட்டையைக் கொண்டு யானையையும், யானை அருகிலிருந்த உதவியாளர்களையும் அடித்தே கொன்றார்... 

இச்செய்தி...‌‌‌ அந்நாட்டின் மன்னர் காதில் விழ... இது ஏதோ பகைவர்கள் சூழ்ச்சி என்று நினைத்து தன் படையுடன் அங்கே விரைந்தான் புகழ்ச்சோழன்... 

யானை இறந்து கிடக்கும் இடத்தில் தங்கள் வீரர்களும் இறந்து கிடப்பதை பார்த்து கண்களில் கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க அங்கே எந்த பகைவர்களும் இல்லை... மாறாக ஒரு சிவனடியார் ( எறிபத்தர் ) மட்டுமே இருந்தார்...‌‌

மன்னருக்கு ஒரே குழப்பம்.... சற்று நேரத்தில் அருகில் இருந்தவர்கள் அங்கே நடந்த யானையின் மரணத்திற்கு சிவனடியார் தான் காரணம் என்று கூற... ஒரு நிமிடம் மன்னர் எறிபத்தரை உற்று பார்த்துவிட்டு... தன் மனதிற்குள் " சிவனடியார் தவறு செய்ய வாய்பில்லை" என்றபடி... எறிபத்தரின் அருகில் வந்து... " ஐயா தாங்கள் இவ்வளவு கோபம் கொள்ள என்ன காரணம் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா"? என்று பணிவுடன் கேட்க்க.... 

அதற்கு எறிபத்தர் நடந்தவைகளை கூற.... அதை கேட்டு மிகுந்த கோபமுற்ற அரசன்...‌" இங்கே நடந்த பிழைக்கு யானை மட்டும் காரணம் அல்ல நானும் ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டேன் ஏனெனில் அந்த யானை எம்முடையது அல்லவா?0 ஆகவே நிச்சயமாக எனக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.. எறிபத்தரே தாங்கள் என்னையும் கொன்று விடும்... தாங்கள் கையில் வைத்திருக்கும் புனித மழுபட்டையால் வேண்டாம் இதோ இந்த வாளால் என்னையும் கொன்று விடுங்கள்" என்று தன் உடைவாளை  கழற்றி எறிபத்தரிடம் கொடுக்க... Shiva Vishnu Tv 

வாளை தன் கையில் வாங்கிய எறிபத்தர் அங்கே மன்னர் கூறியது கேட்டு வாயடைத்து போனார்... இப்படியொரு சிவபக்தி உள்ள நமது அரசனின் மனதையா காயப்படுத்தினோம்!? என்று தனக்குள்ளே வருந்தினார்... பிறகு இம்மன்னன் இறக்க கூடாது... நான் தான் இறக்க வேண்டும் என்று மன்னர் கொடுத்த வாளை தனது கழுத்தில் வைத்து அழுத்தி அறுக்கும் நேரத்தில்... அதிர்ச்சியடைந்த அரசர் ஓடிச்சென்று எறிபத்தரின் கைகளை பிடித்துக்கொண்டு அவரின் முயற்ச்சியை தடுக்க.... 

அப்போது... சிவபெருமான் அவர்கள் இருவருக்கும் காட்சி கொடுத்து... அருள் புரிந்தார்... இந்த உலகத்திற்கு உங்கள் பக்தியை காட்டவே இந்த திருவிளையாடல் என்று மறைந்தார்... 

இறந்த யானை உயிர் பெற்றது... மடிந்து போன வீரர்கள் உயர்பெற்றனர்... 

எறிபத்தர் அரசரின் காலிலும் அரசர் எறிபத்தர் காலிலும் மாறிமாறி விழுந்து ஆசிகள் பெற்றும், வாங்கியும் கொண்டனர்... 

சிவகாமியாண்டர் பூக்கூடையில் மீண்டும் புது மலர்கள் நிரம்பியது... 

இப்படி.... சிவனடியார் அனைவருக்கும் உதவிய எறிபத்தரை தன் 63 நாயன்மார்கள் வரிசையில் சேர்த்துக் கொண்டார் சிவபெருமான் 🙏 
ஓம் நமசிவாய 🙏

தொடரும்... 🙏

Shiva Vishnu Tv 🙏

Comments