63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - 9- ஏனாதி நாத நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 🙏

பகுதி -9

ஏனாதி நாத நாயனார்

நெற்றியில் திருநீறு அணிந்து இருக்கும் ஒரே காரணத்திற்காக தன் எதிரியாக இருந்தாலும் அவனை எதிர்த்துப் போர் புரியாமல் அவனது கரங்களால் தம் உயிரையே தியாகம் செய்தவர் தான் இந்த ஏனாதி நாத நாயனார்... அவரின் வரலாறு பற்றிய சுருக்கம் தான் இந்த பதிவு 🙏

சோழநாட்டில் அரசர்களுக்கு வாட்படை பயிற்சி அளிக்கும் தொழிலை மிகவும் நேர்த்தியாக செய்துவந்தார் இந்த ஏனாதி நாத நாயனார்...

இத்தொழிலில் நல்ல முறையில் வருமானம் வந்ததால் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார்... இந்த செல்வங்களை வைத்து சிவனடியார்களுக்கு சிவ தொண்டு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் 🙏

அந்த பகுதியில் எவர் போர் படை பயிற்சி பெற வேண்டும் என்றாலும் ஏனாதி நாதரையே தேடி வந்து பயிற்சி பெற்றனர்...‌Shiva Vishnu Tv 🙏

அதே பகுதியில் அதிசூரன் என்பவரும் வாட்படை பயிற்சி கொடுக்கும் தொழிலை செய்துவந்தார்... அனைவரும் ஏனாதி நாதரிடம் பயிற்சி பெற சென்றதால் இவருக்கு வருமானம் இல்லாமல் போனது... இதனால் ஏனாதி நாதர் மேல் பொறாமை கொண்டார் அதிசூரன் ... ஒரு கட்டத்தில் பொறாமை என்பது கொலைவெறியாகி ஏனாதி நாதரை கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார் அதிசூரன் ...

ஒரு நாள் அதிசூரன் ... ஏனாதி நாதரை தன்னுடன் போர் புரிய அழைத்தான் ... அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஏனாதி நாதர் தன் மாணவர்களுடன் போருக்கு சென்றார் அதேபோல் அதிசூரனும் தன் படையுடன் போருக்கு வந்தான்...

இரு தரப்பினரும் கடுமையான சண்டை நடந்தது... இறுதியில் ஏனாதி நாதர் வெற்றி பெற்றார்... அதிசூரன் தன் உயிரை காப்பாற்ற ஓடிவிட்டான்...

அன்றிரவு முழுவதும் அதிசூரனுக்கு உறக்கம் வரவில்லை... தன் தோல்வியை நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டான்... எப்படியாவது ஏனாதி நாதரை கொல்ல வேண்டும் என்று குறுக்கு வழியில் யோசித்து ஒரு வழியை கண்டு பிடித்தான்... Shiva Vishnu Tv 🙏

யாரும் இல்லாத தனிமையான இடத்தில் நீயும் நானும் மட்டும் போர் புரிய வேண்டும்... அப்படி போர் புரிந்து நீர் எம்மை ஜெயித்தால்? சரியான வீரன்.. என்று ஏனாதி நாதரை பார்த்து சொல்லிவிட்டு வருமாறு ஒருவனை அனுப்பி வைத்தான் அதிசூரன்...

அந்த செய்தியை கேட்டு ஏனாதி நாதரும் தனியே போர் புரிய சென்றார்...‌ அதிசூரன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தால் அங்கே தனியாக அதிசூரன் போர் புரிய ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார்...

அதிசூரனும் ... ஏனாதி நாதரை பார்த்தவுடன் தன் கேடையத்தால் முகத்தை மறைத்துக் கொண்டு வேகமாக ஏனாதி நாதரை நோக்கி முன்னேற... ஏனாதி நாதரும் வேகமாக வர.... இப்போது சட்டென்று தன் கேடயத்தை தன் முகத்தை விட்டு விலக்கி காட்ட.... எப்போதும் திருநீர் பூசாத அதிசூரன் தன் நெற்றி முழுவதும் திருநீறு பூசி இருப்பதை பார்த்து அப்படியே உறைந்து போய் சிலையாக நின்றார்... Shiva Vishnu Tv 🙏

எப்போது அதிசூரன் தன் நெற்றியில் திருநீறு பூசினாரோ அப்போதே இவர் சிவனடியார் ஆகிவிட்டார் இனிமேல் இவரை எதிர்த்துப் போரிட கூடாது... இவரின் எண்ணம் எதுவோ அப்படியே யாம் நடக்க வேண்டும் என்று...‌ தன் உயிரை கொடுக்க முன் வந்து விடுகிறார்... இருப்பினும் தன் கையில் வைத்திருந்த வாள் மற்றும் கேடயத்தை கீழே போட்டு விட்டால் ஆயுதம் இல்லாத தம்மை இவர் கொல்ல மாட்டார் என்று என்னி... ஆயுதத்தை கீழே போடாமல் அதிசூரனிடம் யுத்தம் புரிபவனை போல் பாசாங்கு செய்து தன் உயிரை சிவனடியாருக்கு கொடுத்தார்....

இச்செயலை கண்ட சிவபெருமான்... ஏனாதி நாதரின் பக்தியில் மகிழ்ச்சியுற்று அவரை தன் 63 நாயன்மார்களில் ஒருவராக சேர்த்துக் கொண்டார் 🙏

ஓம் நமசிவாய 🙏

Shiva Vishnu Tv 🙏

Comments