63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி 10 - கண்ணப்ப நாயனார் 63 nayanmars

63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -10
கண்ணப்ப நாயனார் 

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் கண்ணப்ப நாயனார் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

முருகப்பெருமானை இஷ்ட தெய்வமாக வணங்கிய வேடுவ தம்பதியருக்கு மகனாக பிறந்தார் கண்ணப்ப நாயனார் இவரின் இயற்பெயர் திண்ணனார் என்பதாகும். (யாம் இந்த பதிவில் தின்னனார் என்று குறிப்பிடாமல் கண்ணப்ப நாயனார் என்றே குறிப்பிடுகிறோம் )

கண்ணப்ப நாயனாரின் தகப்பனார் வேடுவ குலத்திற்கு தலைவனாக விளங்கினார் வேட்டி தொழிலில் மிகப்பெரிய திறமைசாலியாக விளங்கினார் காலங்கள் ஓடுகிறது கண்ணப்ப நாயனார் பருவ வயதை அடைகிறார் அதேநேரம் அவரின் தந்தை முதுமை அடைகிறார் இதன் காரணமாக அவரால் முன்பு போல் வேட்டை தொழிலில் பெரிதாக செய்ய இயலாமல் போகிறது

ஒரு காலத்தில் இனி தம்மால் வேட்டை தொழிலில் ஈடுபட முடியாது என்பதை உணர்ந்த கண்ணப்ப நாயனாரின் தந்தை கண்ணப்ப நாயனாரை வேண்டுகோள் தலைவனாக முடிசூட்டுகிறார் அதன் பிறகு வேட்டையாடுவதற்கு அவரை காட்டிற்கு அனுப்புகிறார் ... Shiva Vishnu Tv 

தன் இரு நண்பர்களுடன் கண்ணப்ப நாயனார் காட்டிற்குள் வேட்டையாட செல்கிறார். நீண்ட நேரத்திற்கு பிறகு பன்றி ஒன்று கண்ணில் பட அதை விரட்டி வேட்டையாடுகிறார் கண்ணப்ப நாயனார் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் கலைப்படைந்து போய்விடுகிறார்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் தாகமாக இருக்கிறது என்று தன் நண்பர்களிடம் குறிப்பிட அவர்கள் சிறிது தூரம் சென்றால் அங்கே பொன்முகலி ஆறு இருக்கும் அங்கே தெளிந்த நீர் நமக்கு கிடைக்கும் வாருங்கள் சென்று நீரறிந்து விட்டு வரலாம் என்று கூப்பிட கண்ணப்ப நாயனார் அவர்களை தொடர்ந்து செல்கிறார் ..

நண்பர்கள் ஆட்டின் அருகே கண்ணப்ப நாயனாரை அழைத்துச் சென்ற அதே வேலை அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது அந்த சிவலிங்கத்தை கண்ணப்ப நாயனார் நெருங்க நெருங்க அவர் ஏதோ ஒரு சுகாணுபவத்தை உணர்கிறார். Shiva Vishnu Tv 

சிவலிங்கத்தை கண்டவுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தன் பாச பாசத்தையும் பக்தியையும் சிவனுக்கு கொடுக்கிறார் கண்ணப்ப நாயனார். சிறிது நேரம் சிவலிங்கத்தையே பார்த்த கண்ணப்ப நாயனார் பாவம் இவர் காட்டிலும் தனியாக இருக்கிறாரே இவருக்கு பசிக்குமே இவருக்கு யார் உண்பதற்கு உணவு கொடுப்பார்கள் ஆகவே விரைவாக இவருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு வேக வேகமாக ஓடி பன்றியை வேட்டையாடி அந்த மாமிசத்தை நெருப்பிலிட்டு அந்த மாமிசத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றில் ஓடும் தண்ணீரை வாயில் பிடித்து சிவலிங்கம் அருகே வருகிறார் வந்து தன் வாயில் இருக்கும் நீரால் சிவலிங்கத்தை கழுவி விட்டு தான் எடுத்து வந்த மாமிசத்தை அதுவும் தான் சாப்பிட்டு நல்லா இருக்கிறது என்று தெரிந்த பிறகு அந்த மாமிசத்தை அதாவது எச்சில் பட்ட மாமிசத்தை இறைவனுக்கு கொடுத்து ஐயா இந்த மாமிசங்கள் அனைத்தும் சுவையான நான் ஒன்று பார்த்தேன் நீங்களும் சாப்பிட்டு போய் விடுங்கள் என்று குறிப்பிட்டபடி சிவலிங்கத்திற்கு படைக்கிறார்...Shiva Vishnu Tv 

பிறகு இரவு ஆன பிறகு தூங்காமல் சிவலிங்கத்திற்கு துணையாக வெல்லும் அன்பும் வைத்து மிருகங்கள் தாக்காதபடி சிவலிங்கத்துக்கு  பாதுகாப்பாக நிற்கிறார். பொழுது விடிந்த உடன் மீண்டும் சிவலிங்கத்திற்கு உணவு கொடுக்க வேண்டும் என்று வேட்டையாட கிளம்பி விடுகிறார் ...

அதே நேரம் அங்கே இருக்கும் அந்த சிவலிங்கத்தை வழக்கமாக பூஜை செய்யும் ஒரு அந்தணர் ஆகம விதிமுறைகளை நன்கு அறிந்து அந்தணர் ஆவார் அவர் அவர் எப்பொழுதும் சுத்தமான நீர் மனம் ததும்பும் சுத்தமான புதிய பூக்கள் மற்றும் குங்குமம் சந்தனம் விபூதி போன்றவைகளை எடுத்து வந்து சிவபெருமானை நன்றாக பூஜை செய்துவிட்டு செல்வார்.. அதேபோல் பூசணி செய்யும் என்னத்துடன் அந்தணர் வந்தவுடன் அங்கே இருக்கும் சிவலிங்கத்தின் மேல் இருக்கும் மாமிசத்தையும் எலும்புகளையும் பார்த்து மிகுந்த அச்சமும், கோபமும் அடைகிறார். "யார் இந்த காரியத்தை செய்தார்களோ! கடவுளே" என்றபடி அங்கே இருந்த எலும்புகளையும் மாமிசத்தையும் எடுத்து தூர போட்டுவிட்டு சிவலிங்கத்தை நன்றாக கழுவி விட்டு அங்கே ஆகம விதிப்படி மீண்டும் பூஜை செய்துவிட்டு தன் வீட்டிற்கு செல்கிறார் ...Shiva Vishnu Tv 

சிறிது நேரத்தில் அங்கே வரும் கண்ணப்ப நாயனார் தான் வேட்டையாடிய பல வகையான மிருகங்களின் மாமிசங்களை தீயில் பாட்டி அதில் தேன் போன்றவற்றை பிழிந்து விட்டு தானும் உண்டு விட்டு சிறந்த உணவுகளை எடுத்து சிவபெருமானுக்கு வழக்கம்போல் தன் வாயில் கொண்டு வந்த நீரால் குளிப்பாட்டி மாமிசங்களை வைத்து சாப்பிட சொல்கிறார்.. பிறகு வழக்கம்போல் சிவபெருமானுக்கு அருகிலேயே நின்றபடி விண்ணோடும் அன்போடும் காவலுக்கு விடிய விடிய நிற்கிறார். பொழுது விடிந்தவுடன் மீண்டும் சிவபெருமானுக்கு உணவு படைக்க வேண்டும் என்று ஆவலுடன் காட்டை நோக்கி ஓடுகிறார்... 

இப்பொழுது மீண்டும் அடுத்த நாள் அந்தணர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அங்கே வரும் பொழுது நேற்று அவர் கண்ட அதே காட்சி இங்கே இருப்பதைக் கண்டு மிகுந்த கோபம் கொள்கிறார் "இந்த காரியத்தை வேடுவ குலத்தைச் சார்ந்தவர்கள் தான் செய்திருக்க வேண்டும்! அவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள், அவர்கள் குலம் நாசமாய் போய்விடும், இதைச் செய்தவர் யாராக இருந்தாலும் நரகத்திற்கு தான் செல்வார்" போன்ற வார்த்தைகளை கூறி தன் ஆத்திரம் தீர திட்டி விட்டு அந்த இடங்களை மீண்டும் சுத்தம் செய்துவிட்டு தான் கொண்டு வந்த புஷ்பங்களையும், திரவங்களையும் கொண்டு சிவபெருமானை கழுவி குளிப்பாட்டி மீண்டும் ஆகம விதிப்படி பூஜை செய்துவிட்டு அங்கிருந்து இறைவனிடம் வேண்டி விட்டு செல்கிறார்..

மாலை நேரம் நெருங்குகிறது மீண்டும் கண்ணப்ப நாயனார் தான் மும்பை விட அதிகமாக மாமிசங்களை தேனில் துவைத்து நெருப்பில் வாட்டி சிவலிங்கத்திற்கு படைக்கிறார் மீண்டும் அதே போல் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானுக்கு காவலாக இருக்கிறார் இப்படியாக  ஆறு நாட்கள் செல்கிறது... அதாவது அந்தணர் வந்து சிவபெருமானை கழுவி குளிப்பாட்டி பூக்களையும் நறுமணங்கள் வீசும் மலர்களையும் வைத்து ஆகம விதிப்படி பூஜை செய்துவிட்டு செல்வதும் அதை கலைத்துவிட்டு  கண்ணப்ப நாயனார்  மாமிசத்தை வைத்து படைப்பதும் பிறகு மறுநாள் வந்து அந்தணர் மாமிசத்தை சுத்தம் செய்து விட்டு மலர்களை வைத்து பூஜை செய்வதும் ஆறு நாட்களாக செல்கிறது. 

அந்தணர் ஒரு முடிவுக்கு வருகிறார் இனி நாம் புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை இறைவனிடமே முறையிடுவோம் என்றபடி மனதில் நினைத்தவாறு சிவபெருமான் முன்பு நின்று "இறைவா இச்செயல் எவர் செய்தாலும் அவரை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும், அவர் இவ்வுலகில் வாழ தகுதியற்றவர், ஆகவே அவருக்கு சரியான தண்டனை கொடுங்கள். என்றபடி வேண்டி விட்டு தன் வீட்டிற்கு சென்று படுத்து உறங்குகிறார் அவர் உறங்கும் போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி "அந்தணரே நீங்கள் கண்ணப்ப நாயனாரை சபிக்காதீர்கள், அவர் நீங்கள் எப்படி என் மீது பக்தியும், மரியாதையும், பாசமும்Shiva Vishnu Tv  வைத்திருக்கிறீர்களோ... அதைப்போலவே அவரும் என் மீது பக்தியும், மரியாதையும், பாசமும் வைத்திருக்கிறார் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரின் பக்தியை நீங்கள் பார்க்க விரும்பினால் நாளை எனக்கு பூஜை செய்து விட்டு நீங்கள் வீட்டிற்கு வராமல் அங்கேயே ஒரு மரத்தின் பின்பு நின்று நடப்பதை கவனியுங்கள் உங்களுக்கு உண்மை புரியும்" என்று சொல்லிவிட்டு மறைகிறார்... 

அதேபோன்று மறுநாள் அந்தணர் சிவபெருமானை சுத்தம் செய்து பிறகு ஆகம விதிப்படி பூஜையும் செய்துவிட்டு சிவலிங்கத்திற்கு அருகே இருக்கும் மரத்தின் பின்பு ஒளிந்து கொள்கிறார் .. 

வழக்கம்போல் மாமிசங்களை எடுத்து எடுத்துக்கொண்டு வரும் கண்ணப்ப நாயனார் சிவலிங்கம் அருகே வந்து பார்த்த பொழுது அங்கே சிவலிங்கத்தின் அருகே குளம் போல் ரத்தம் தேங்கி இருப்பதை பார்த்து சிவலிங்கத்தை நோக்கி பார்க்கிறார் அப்போது சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வழிந்து ஓடுகிறது ... இந்த காட்சியை கண்ட கண்ணப்ப நாயனார் சற்றென்று மயக்கமுற்று கீழே விழுகிறார் சிறிது நேரம் கழித்து அதாவது மயக்கம் தெளிந்து மீண்டும் எழுந்து சிவலிங்கத்தை பார்த்து கண்கலங்குகிறார் மனதில் கோபம் எழுகிறது எவரோ வேட்டையாட வந்த வேட்டைக்காரர்கள் தான் இச்செயலை செய்திருக்கிறார்கள் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன் என்றவாறு வேக வேகமாக வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு காடு முழுவதும் சுற்றுகிறார் ஆனால் அங்கே யாருமே இல்லை திடீரென்று அவர் மனதில் கடவுளை தனியே விட்டுவிட்டு வந்து விட்டோமே அவர் வேறு கண்களில் அடிபட்டு இருக்கிறதே அவரிடம் செல்ல வேண்டுமென்று வேகமாக சிவலிங்கத்தை நோக்கி ஓடிவந்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து ஓவென்று அழுகிறார் "என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்? உங்கள் குருதியை எப்படி நிற்கச் செய்வேன்?" என்றபடி புலம்பி அழுகிறார்Shiva Vishnu Tv 

சில மணித்துளிகள் இப்படியே சென்று கொண்டிருந்து பிறகு திடீரென்று தன் மனதிற்குள் ஒரு யோசனை தோன்ற மீண்டும் காற்றுக்குள் ஓடுகிறார் அங்கு இருக்கும் பலவிதமான மூலிகைகளை பறித்து கொண்டு வேக வேகமாக  சிவலிங்கத்தை நோக்கி வருகிறார் வந்த உடனே மூலிகைகளை கசக்கி அரைத்து குருதி கசியும் கண்ணில் அப்புகிறார் ஆனால் என்ன செய்தும் சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து வரும் ரத்தம் நிற்கவே இல்லை மீண்டும் மீண்டும் கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறார் ...

இங்கே நடக்கும் அனைத்தையும் மரத்தின் பின் ஒளிந்திருக்கும் அந்தணர் பார்த்து ஒன்றும் புரியாமல் விக்கித்து  போய் நிற்கிறார் ..  கண்ணப்பர் செய்யும் ஒவ்வொரு செயலும் அந்தநரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது ... 

சில மணித்துளிகள் கழித்து கண்ணப்ப நாயனருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது என்று தன்னுடைய அம்பை எடுத்து தனது ஒரு கண்ணை தோண்டி குருதி வழியும் சிவலிங்கத்தின் கண்ணில் தமது கண்ணை வைக்கிறார் என்ன ஆச்சரியம் சிவலிங்கத்தில் இருந்து கசிந்த குருதி நின்று விடுகிறது உடனே கண்ணப்ப நாயனருக்கு சொர்க்கத்தில் மிதப்பதை போல இருக்கிறது இறைவன்  கண்ணில் வழிந்த குருதி நின்று விட்டது. நான் மகிழ்ச்சி உற்றேன்" என்று மகிழ்ச்சி அடைய நினைக்கும் பொழுதே சிவலிங்கத்தின் மற்ற கண்ணிலிருந்து குருதி வழிய ஆரம்பிக்கிறது ... 

இந்த காட்சியை கண்ட அந்தணர் தம் மனதிற்குள் தாம் காண்பது கனவா அல்லது நினைவா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார் ஏனெனில் இப்படி ஒரு பக்தியை இதற்கு முன்பு அவர் கேள்விப்பட்டது கூட இல்லை என்பது அவர் அளவில் உண்மை... Shiva Vishnu Tv 

லிங்கத்தின் மறு கண்ணில் குருதி வழிந்ததை பார்த்த கண்ணப்ப நாயனார் சிறிது கூட யோசிக்காமல் எனக்கு தான் தெரிந்து விட்டது உமது கண்ணில் வரும் குருதியை எப்படி நிறுத்த வேண்டும் என்பது இனி என்ன எனக்கு கவலை என்றபடி சிவலிங்கத்தின் கண்ணில் அதாவது குருதி வழியும் கண்ணில் தனது இடது காலை கட்டை விரல தூக்கி வைத்துக்கொண்டு அதாவது
 இரண்டு கண்களையும் எடுத்து விட்டால் கண் நமக்கு தெரியாதல்லவா அடையாளத்திற்காக அப்படி தனது விரலைத் தூக்கி லிங்கத்தின் கண்ணில் வைத்து விட்டு பிறகு தனது இன்னொரு கண்ணையும் தோண்டி எடுக்கச் செல்ல அடுத்த நொடி "கண்ணப்பா வேண்டாம் என்று மூன்று முறை சிவபெருமான் சொல்லி கண்ணப்ப நாயனார் க்கு காட்சி அளித்ததாக வரலாறு கூறப்படுகிறது.

 அதுவரை தின்னனார் என்று அழைக்கப்பட்டவர் கண்ணையே கடவுளுக்கு கொடுக்க முன் வந்ததால் கண்ணப்ப நாயனார் என்று போற்றப்பட்டார் இறைவனின் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் சேர்க்கப்பட்டார் 

ஓம் நமச்சிவாய 🙏

Shiva Vishnu Tv 
  


Comments