63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி 11- குங்கிலியக்கலய நாயனார் 63 nayanmars

63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -11
குங்கிலியக்கலய நாயனார் 


63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் குங்கிலியக்கலய நாயனார் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

திருக்கடவூர் சிவன் கோவிலில் குங்கிலிய தூபம் ( சாம்பிராணி) இடும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வந்தார் கலயனார்.. இவர் சிவ பக்தியிலும், அடியார்களுக்கு பணிவிடை செய்வதையும் தம் பாக்கியமாக கருதி வாழ்ந்து வந்தார்... 

தமது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போதும் தமது சிவ வழிபாட்டில் குறை வைக்கவில்லை...‌‌ஆகவே சிவபெருமான் தம் திருவிளையாடல்களை கலயனார் வாழ்க்கையில் நிகழ்ந்த முடிவு செய்து விளையாட்டை ஆரம்பித்தார்... Shiva Vishnu Tv

திருவிளையாடலின் விளைவாக... நன்றாக செல்வ செழிப்புடன் வாழ்ந்த கலயனார் குடும்பம் மெல்ல, மெல்ல   வரும்வரை நோக்கி சென்றது... 

நெல் விளையும் நிலங்கள் விற்க்கப் படுகிறது அப்போதும் தமது சிவ தொண்டு செய்வதை நிறுத்தவில்லை ...  ஆபரணங்கள் விற்க்கப்படுகிறது ...‌‌ அப்போதும் தமது சிவ பணியை தொடர்ந்து செய்கிறார் கலயனார் ... ஒரு கட்டத்தில் கலயனார் தம் வசமிருந்த அனைத்து செல்வங்களையும் விற்றுத் தீர்ந்தது தெரிந்தும்.... சிவ தொண்டு செய்வதை நிறுத்தவில்லை... ( சிவபெருமானின் திருவிளையாடல்கள் என்பது அவருக்கு தெரியாதல்லவா) ஒரு கட்டத்தில் உண்பதற்கு உணவு கூட இல்லாமல் கலயனார் மற்றும் மனைவி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்... 

இரண்டு நாட்கள் பசியோடு தன் குடும்பம் இருப்பதை பார்த்து வேதனையோடு கலயனார் அமர்ந்திருக்க அப்போது அங்கே வரும் அவரது மனைவி தனது மாங்கல்யத்தை ( தாலி ) கழட்டி கலயனாரிடம் கொடுத்து " இதை விற்பனை செய்து அதில் வரும் பொருளைக் கொண்டு நெல் வாங்கிட்டு வாருங்கள்" என்று கலங்கிய கண்களுடன் கூற... வேறு வழியின்றி வாழும் கலயனார் கைகள் நடுங்கியபடி அந்த மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டு வெளியே கிளம்புகிறார்...

மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு வேக வேகமாக கடையை நோக்கி செல்லும் கலயனாரை ஒருவர் இடைநிறுத்தி "கலயனார் அவர்களே... "இதோ பாருங்கள் அற்புதமான குங்கிலியம்" என்றபடி துணி முடிப்பை அவிழ்த்து காட்ட... அந்த குங்கலியத்தை பார்த்தவுடன் தனது குடும்ப கஷ்ட்டத்தஐ அடியோடு மறந்து தன் வசமிருந்த தாலியை அவரிடம் கொடுத்து விட்டு குங்கலியத்தை வாங்கிக் கொண்டு வேகமாக சிவபெருமான் கோவிலை நோக்கி செல்கிறார். 

தன் கணவன் நெல்லுடன் வருவார் அவர் வந்தவுடன் விரைவாக சமைத்து தன் பிள்ளையின் பசியாற்ற வேண்டும் என்ற நினைப்பில் வாசலையே பார்த்து கொண்டிருந்தாள் கலயனாரின் மனைவி.... வெகு நேரமாகியும் கணவன் வராததால் தன் குழந்தையுடன் பசி மயக்கத்தில் உறங்கி விடுகிறார்கள்... Shiva Vishnu Tv

குங்கலியத்தை எடுத்துக் கொண்டு கோவில் உள்ளே செல்லும் கலயனார் அங்கேயே படுத்துக் கொள்கிறார்... 

இங்கே நடப்பதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கும் சிவபெருமான்... குபேரனை பார்த்து கண் அசைக்க... புரிந்துகொண்ட குபேரன் கலயனார் வீட்டில் பொன்னும், பொருளும், நெல் மூட்டைகளையும் வரச் செய்து விடுகிறார்... 

கலயனாரின் மனைவி உறக்கம் கலைந்து எழுந்து பார்க்க அவருக்கு ஒரே வியப்பு... உடனடியாக சமைத்து தன் பிள்ளையின் பசியை போக்குகிறார்... 

கோவிலில் பசியுடன் படுத்து உறங்கும் கலயனார் கனவில் சிவபெருமான் தோன்றி "உனக்கு தேவையானவற்றை உமது வீட்டில் கொடுத்து இருக்கிறேன் நீ இங்கே இருக்காமல் உமது வீட்டிற்கு சென்று மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இரு"  என்று கூறிவிட்டு மறைய.... கனவு கலைந்து எழுந்த கலயனார் வேகமாக தன் வீட்டை நோக்கி சென்று பார்த்து இறைவனின் கருணையை நினைத்து நன்றி கூறி வணங்கினார் .... கடவுள் கொடுத்த செல்வங்களை வைத்து தான் தமது குடும்பம் மட்டும் இல்லாமல் சிவனடியார்களுக்கும் பல உதவிகளும் சேவைகளும் புரிந்து இன்பமாக வாழ்ந்தனர்... 

திருப்பனந்தாள் எனும் ஊரில்... ஒரு சமையம் தாடகை என்ற அரச மாதுக்கு சிவபெருமான் சார்ந்த நிலையில் காட்சி கொடுத்தார்... பல வருடங்கள் சென்ற பிறகும் சாய்ந்த லிங்கம் சாய்ந்த படியே இருந்தது... Shiva Vishnu Tv

பின்னாளில் வந்த சோழ மன்னன்... சாய்ந்த நிலையில் இருக்கும் லிங்கத்தை நேராக்கி கும்பிட வேண்டும் என்று... முதலில் ஆட்களை வைத்து முயற்சி செய்தான் லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை... 

ஒரு புறம் பல குதிரைகள் இணைத்து மறுபுறம் அந்த குதிரையில் இருந்து இணைக்கப்பட்ட கயிற்றைக் கொண்டு சிவலிங்கத்தை நிமிர்த்த முயற்சி செய்ய அப்போதும் சிவலிங்கம் சிறிதும் அசையவில்லை...

அடுத்ததாக யானைகள் கொண்டு இதே முயற்ச்சியை செய்ய அந்த முயற்ச்சியும் தோல்வியில் முடிய... ( அதாவது குதிரைகளும், யானைகளும் கலைப்படைந்து சோர்ந்து கீழே விழுந்துவிடுகிறது) இதனால் சோழ மன்னன் பெருங்கவலை கொண்டு அமைதியாக அமர... ஒரு கட்டத்தில் சோகமே வடிவாக சோழமன்னன் இருக்கும் செய்தி நாடு முழுவதும் செல்ல...‌. கலயனாரும் இந்த செய்தியை கேள்விப்பட்டு அவ்விடம் நோக்கி செல்கிறார்... 
Shiva Vishnu Tv

சாய்ந்த நிலையில் இருக்கும் லிங்கத்தை தரிசனம் செய்து விட்டு... மெதுவாக அங்கே கிடைக்கும் பெரிய கயிரை எடுத்து தமது கழுத்தில் கட்டிக்கொண்டு மறு முனையில் சிவலிங்கத்தை கட்டுகிறார். பிறகு  தமது பலம் முழுவதையும் திரட்டி லிங்கத்தை இழுக்க சில மணித்துளிகள் சாய்ந்து இருந்த சிவலிங்கம் நேராக நிமிர்ந்தது ... இக்காட்சியை கண்ட நாட்டு மக்கள் மற்றும் அரசன் கலயனார் காலில் விழுந்து வணங்கினார்... மேலோகத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர்... 

சிவபெருமானுக்கு குங்கிலியம் தூபம் வீசும் வேலை செய்ததால் கலயனார் என்று இருந்த பெயர் பின்னாளில் குங்கலியக்கலயனார் என்று அழைக்கப்பட்டது... 

இவ்வாறு சிவ சிந்தனையுடன் வாழ்ந்த குங்கலியக்கலய நாயனார் அடியார்க்கும் தொண்டு செய்து இறுதியில் சிவனடி சேர்ந்தார்... 

சிவபெருமான் குங்கலியக்கலய நாயனாரை தன் 63 நாயன்மார்களில் ஒருவராக சேர்த்துக் கொண்டார் 🙏

ஓம் நமசிவாய 🙏

Shiva Vishnu Tv 🙏




Comments