63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி 12 - மானக்கஞ்சாற நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -12
மானக்கஞ்சாற நாயனார் 

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் மானக்கஞ்சாற நாயனார் அவர்களின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

தன்னிடம் இருக்கும் அனைத்தும் சிவபெருமான் கொடுத்தது என்று ஆணித்தரமாக நம்பி வாழ்ந்தவர் தான் மானக்கஞ்சாற நாயனார் இவர் கஞ்சாறு எனும் ஊரிலே பிறந்தவர் சேனாதிபதி பதவியை வகித்து வந்தார் சிவத்தொண்டில் மிகவும் சிறந்தவராக திகழ்ந்து வந்தார் சிவபெருமானுக்கு என்ன வேண்டுமோ அதை ஒரு நொடியும் யோசிக்காமல் எடுத்துக் கொடுக்கும் சிவ பக்தி உள்ளவராக இருந்தார் மானக்கஞ்சார நாயனார் .

நாட்டிலே மதிப்பிற்குரிய பதவி வகித்து வந்தும் அதாவது சேனாதிபதி பதவியில் இருந்தும் அவரிடம் குறைவில்லாத செல்வங்கள் இருந்தும் ஒரு குறை மட்டும் அவரிடம் இருந்தது அது என்னவென்றால் குழந்தை பாக்கியம் இல்லாமல் பெரும் கவலையுடன் வாழ்ந்து வந்தனர் தம்பதிகள் இதனால் சிவபெருமானிடம் முறையிட்டு குழந்தை வரத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கேட்டு வந்தார் மானக்கஞ்சாற நாயனார்.. Shiva Vishnu Tv 

வேண்டுதலின் விரைவாக மான கஞ்சார நாயனாரின் மனைவி கர்ப்பமுற்றார் பின்பு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார் குழந்தையும் நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து திருமண வயதை அடைந்தது... 

தனது மகளுக்கு நாடெங்கும் தேடி தனது குளத்திலே அதாவது சேனாதிபதி குளத்திலேயே ஒரு நல்ல மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் முடிப்பதற்கு உண்டான வேலையை ஆரம்பித்தார் மானக்கஞ்சாற நாயனார் திருமண நாளும் வந்தது.

தன் மகளை ஜோடித்து திருமண செய்து வைக்க அழைத்து சென்று கொண்டிருக்கும் வேளையிலே சிவபெருமான் தமது திருவிளையாட்டை தொடங்கினார் ஒரு சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் மான கஞ்சா நாயனார் எதிரே வந்தார் சிவனடியாரை பார்த்தவுடன் மான கஞ்சார நாயனார் அவரது கால்களிலே விழுந்து ஆசீர்வாதங்கள் வாங்கிக் கொண்டு வணங்கினார்.. 

சிவனடியார் ஆசிர்வாதம் செய்துவிட்டு மான கஞ்சார நாய் பார்த்து இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்க அதற்கு மாத கஞ்சா நாயனார் தனது மகளை சுட்டிக்காட்டி "எமது மகளுக்கு இன்று திருமணம்" என்று மகிழ்ச்சி பொங்க மன கஞ்சார நாயனார் குறிப்பிட அதற்கு சிவர அடைய ட்டும் என்று வாழ்த்து கூறுகிறார்.. Shiva Vishnu Tv 

உடனடியாக மான கஞ்சார நாயனார் தனது மகளை அழைத்து சிவனடியாரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள் மகளே என்று குறிப்பிட அவரது மகளும் சிவனடியாரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் கேட்க ...அப்பொழுது அந்தப் பெண்ணின் கூந்தலை கண்ட சிவனடியார் அந்த முடியை சுட்டிக்காட்டி "இது நமது பஞ்சவடிக்கு ஆகும்" என்று குறிப்பிட உடனடியாக சற்று யோசிக்காத மான கஞ்சார நாயனார் அருவாளை எடுத்து தனது மகளின் முடியை ஒட்ட அறுத்து அதை சிவனடியார் கையில் சிரித்த முகத்துடன் கொடுக்கிறார்.

மான கஞ்சார நாயனாரின் இந்த சிவபக்தியை பார்த்து மெச்சிய சிவபெருமான் தன்னுடைய மனைவியான பார்வதி தேவியுடன் அங்கு இருக்கும் அனைவருக்கும் காட்சி கொடுத்து "உமது பக்தியை மெச்சு" கிறோம் என்று ஆசீர்வாதங்கள் செய்துவிட்டு இருவரும் மறைகிறார்கள் மறைந்த உடன் மான கஞ்சார நாயனார் பெண்ணிற்கு மீண்டும் தமது முடி அழகாக வளர்ந்து விடுகிறது பின்பு இனிதே திருமணம் நடந்து முடிகிறது இப்படி தன்னுடைய பெண்ணின் திருமண நாளில் அவரது கேசத்தையே வெட்டி கொடுத்த மான கஞ்சார நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக உள்ளார் 

ஓம் நமச்சிவாய 🙏

Shiva Vishnu Tv 

Comments