18 சித்தர்கள் -1 அகத்தியர் மாமுனிகள்


18 சித்தர்கள் வரலாறு

1) அகத்தியர் மாமுனிகள் 

சித்தர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகளை பார்க்கவிருக்கிறோம். அந்த வகையில் இந்த பதிவில் அகத்திய மாமுனிகள் சித்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். 🙏

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண நன்னாளில்... சிவ பார்வதி திருமணத்தை பார்ப்பதற்காக ஈரேழு உலகிலும் உள்ள அனைத்து தேவர்களும் முனிகளும் ரிஷிகளும் கடவுள்களும் திருமணத்துக்கு வந்து விடுகின்றனர்... 

இதனால் பூமியானது வடபக்கம் அதாவது கைலாய மலை இருப்பது வடக்கு ஆகும் நம் தமிழ்நாடு இருப்பது தெற்கா ஆகும் அப்படி எனில் கைலாயம் மலையில் திருமணத்திற்கு அனைத்து நற் சக்திகளும் ஒரே இடத்தில் குவிந்ததால் பூமி ஒரு பக்கம் கீழே கணம் தாங்காமல் அமுங்கி விட்டதாகவும் அதாவது வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி மேலேயும்  வந்து விடுகிறது.. 

இதன் காரணமாக பூலோகத்தில் பல பிரச்சனைகள் வருவதற்கு உண்டான சூழல் ஏற்படவே அனைத்து தேவர்களும் முனிகளும் ரிஷிகளும் இறைவனிடம் இப்பொழுது என்ன செய்யலாம் என்று  கேட்கும் பொழுது...‌ பரமேஸ்வரன் உடனடியாக அகத்திய முனியை வரவழைக்கிறார்.

அவரை அகத்தியா நீ தென்திசை நோக்கி செல். நீ தென்திசையை நோக்கி சென்றாள் சாய்ந்த இப் பூவுலகம் சமமாகிவிடும் அதாவது மேலோங்கி நிற்கும் தென் திசை சமமாகிவிடும் என்று கூறுகிறார். அப்பொழுது அங்கே இருக்கும் சிலர் சிவபெருமானை பார்த்து அகத்தியன் என்ற ஒருவர் சென்றால் போதுமா? சமமாகிவிடுமா பூலோகம் என்று கேட்கும் பொழுது அகத்தியன் என்ற ஒருவன் சென்றாலே போதும் என்று அவர்களுக்கு பதில் கூறிவிட்டு... அகத்தியரை பார்த்து அகத்தியரே நீங்கள் தென்திசை நோக்கி செல்லுங்கள் என்று கூற... அதற்கு அகத்தியர் "பகவானே உங்கள் திருமணத்தை காண அனைத்து ஜீவராசிகளும் ஏங்கிக் கொண்டிருக்கும் தருவாயில் எனக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா? உங்கள் திருமணத்தை காணும் பாக்கியத்தை இழந்து நான் தென் திசை நோக்கி செல்ல வேண்டுமா?" என்று தந்தையிடம் மகன் உரிமையில் கேட்க... அதற்கு சிவபெருமான் "நீ எங்கே, எப்பொழுது, எந்த நேரத்தில் எமது திருமண கோலத்தை பார்க்க ஆசைப்படுகிறாயோ அங்கே, அந்த இடத்தில், அந்த நேரத்தில் எமது திருமண காட்சி கோளத்தை உமக்கு கொடுப்போம்" என்று வாக்கு கொடுக்கிறார் சிவபெருமான் அதில் மிக்க மகிழ்ச்சி அடைந்த அகத்தியர் தென்திசை வந்ததாக புராணங்கள் கூறுகிறது.  

   

Comments