18 சித்தர்கள் யார்? சித்தர்கள் என்பவர்களை எப்படி வணங்க வேண்டும்? 18 சித்தர்கள் வரலாறு


18 சித்தர்கள் அறிமுகம் 

சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி இருக்க வேண்டும் எதையெல்லாம் செய்ய வேண்டும்? என்ற அகத்தியர் மாமுனிகள் கேள்விக்கு முருகப்பெருமான் கீழ்காணும் பதிலில் சித்தர்கள் பற்றி விளக்குகிறார்...

இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்சையும் இருபத்தோராயிரத்து அறுநூறு உருவாக ஏற்கவேண்டும். ஒரு மூச்சுக்கு ஒரு உரு என்றில் இரவும் பகலும் இடைவிடாமல் செபத்திலேயே ஈடுபட்டிருக்கி வேண்டும்.

பொருள் பொதிந்த சாத்திரங்கள் எல்லாவற்றையும் உணர்ந்திருக்க வேண்டும். ஒரே ஒரு நொடி நேரத்திற்குள் இந்த உலகம் முழுவதையும் சுற்றிவரக் கூடிய ஆற்றல் பெற்றிருக்க Shiva Vishnu Tv 

தன்னுடைய உடலை அணுவில் அணு என்று சொல்லத்தக்க அளவில் சிறியதாகவும், பெரியவற்றுள் எல்லாம் மிகப் பெரியதாகவும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்:

எந்த நாட்டின் எந்த மூலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, வழக்க மொழியாலும், கண்களாலேயே அறிவுறுத்தவும் அறியவும் கூடிய நயன்பாஷையாலும் தான் அறிந்து கொள்ளவும் மற்றவர்களுக்கு அறிவுறுத்தவும் ஆற்றல் படைத்தவனாக இருக்கவேண்டும். அதோடு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திறன் பெற்றிருக்கவும் வேண்டும்.

தொலைவிலுள்ள பொருள்களைக் காணும் ஆற்றல்வேண்டும். உலகத்தில் நடைபெறும் எல்லாவிதமான செயல்களையும் இருந்த இடத்திலிருந்தே எளிதாக அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வளவும் பெற்றிருந்தாலும் புலன்களை அடக்கி சுயமான ஒளியாக விளங்கும் பரிபூரணத்தின் பாதம் போற்றி, அது ஈரேழு உலகங்களிலும் நிறைந்திருக்கக் கூடியதாகையால் அந்தப் பரிபூரணத்தின் தன்மையைத் தானும் அடைந்து இருப்பவனே சித்தனாவான்.

மேலும் அட்டமா சித்திகளையும் சித்தன் கற்றிருக்க வேண்டும் எனவும்.... சித்தர்கள் தங்கள் ஆன்ம ஞானத்தை பெருக்கிக் கொண்டு தாங்கள் உடலுடன் இருக்கும் பொழுதே இறைவனுடன் கலந்து விடுவார்கள். நினைவு செயல் என்பவற்றை துறந்து சிவனோடு ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள். சித்தர்கள் வாசியில் வாழ்பவர்கள் என்றும் முருகப்பெருமான் அகத்தியர் மாமுனிகளிடம் சித்தர்கள் பற்றி விளக்குகிறார் 🙏Shiva Vishnu Tv 

.................................................................................

பொதுவாக நாம் கோவிலுக்கு சென்றால் என்ன செய்வோம்? மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை முதன்மையாக வழிபட்டு விட்டு பிறகு நந்தி, அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் போன்றவர்களை வணங்கி விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வீடு திரும்புவோம் ( இப்போதெல்லாம் பலபேர் சில நிமிடங்கள் அமர கூட நேரம் இல்லாமல் விரைவாக வீடு திரும்புகின்றனர்) ...

இதுதானே வழக்கம்... என்று நீங்கள் கேட்பது புரிகிறது...  இது பொதுவாக அனைவரும் வழிபடும் வழக்கம்... சித்தர்கள் வழிபாடு என்பது முற்றிலும் வேறுபட்ட வழிபாடு ஆகும்... 

சுமார் 18 வருடங்களுக்கு முன்பு கடலூரில் உள்ள நண்பர்களுடன் ஒரு ஆன்மீக சுற்றுலாவிற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பொழுது பல கோவில்களில் அவர்கள் சாதாரணமாக அனைவருக்கும் சாமி கும்பிட்டு விட்டு பிறகு ஏதோ ஒரு மண்டபம் முன்பு உட்கார்ந்து நீண்ட நெடிய நேரம் தியானத்தில் ஈடுபட்டனர் ( அது சித்தர்கள் ஜீவ சமாதி என்பது பிறகுதான் எமக்கு தெரியும்) எமக்கோ ஒன்றும் புரியவில்லை கோவிலில் சீக்கிரமாகவே சாமி கும்பிட்டு முடித்துவிட்டு இங்கே என்ன ஏதோ ஒரு மண்டபத்தின் முன்பாக உட்கார்ந்து இவ்வளவு நேரம் தியானத்தில் ஈடுபடுகின்றனர்! இது என்ன? என்று கேட்கும் பொழுது அவர்கள் அப்பொழுது விளக்கமாக கூறியது என்னுடைய மூளைக்கு அப்போது எட்டவில்லை என்பதே உண்மை.. 🙏

அதில் ஒரு நண்பர் என்னிடம் சித்தர்களின் வரலாறுகளை சுருக்கமாகவும் அவர்களை பற்றிய புத்தகங்களையும் கொடுத்தார் நான் ஏதோ போன போக்கில் அதை படித்துவிட்டு நன்றாக இருந்தது கதை என்று கூறிவிட்டு வந்து விட்டேன். 

 வருடங்கள் கடந்த பிறகு ஒரு வாலிபனாக இருந்து விட்டு பக்குவமான வயதை அடைந்த பிறகு தான் ஆன்மீகத்தில் உள்ள பொறுமையும் நிதானமும் புரிய வந்தது. அப்பொழுது மெல்ல மெல்ல ஆன்மீகத்தை நிறுத்தி நிதானமாக உணரும்போதுதான் சித்தர்கள் என்பவர்கள் யார் அவர்களை வணங்கும் முறை போன்றவற்றை யாமும் புரிந்து கொண்டு சித்தர்களை வணங்க ஆரம்பித்தோம்.. 

அதாவது சித்தர்கள் வழிபாடு என்பது சுருக்கமாக என்னவென்று சொல்ல வேண்டும் என்றால் ? சித்தர்கள் பல நூறு வருடங்கள், பல ஆயிரம் வருடங்கள்... வாழ்ந்த சித்தர்களின் வரலாறு இங்கே கூறப்படுகிறது... இன்னுமும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சித்தர்கள் இறப்பதில்லை அவர்கள் ஜீவசமாதி ஆகிறார்கள். ஜீவசமாதி என்பதே ஒருவர் உயிருடன் சமாதி ஆவதே ஜீவசமாதி என்கிறோம் அந்த இடத்தில் அதாவது அந்த ஜீவசமாதிக்குள் சித்தர்கள் உயிருடன் இருப்பதாக இப்பொழுதும் ஆன்மீக பெரியவர்களால் நம்பப்படுகிறது.Shiva Vishnu Tv 

ஆகவே சித்தர்களின் ஜீவ சமாதிக்கு முன்பாக அமர்ந்து நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்தி நம்முடைய தேவைகளை அவர்களிடம் சொன்னால் அந்த தேவையில் ஒரு நியாயம் இருப்பின் சித்தர்கள் அந்த தேவையை ஏதோ ஒரு வகையில் நமக்கு பூர்த்தி செய்வதாக இப்பொழுதும் ஆன்மீகப் பெரியவர்களால் நம்பப்படுகிறது. 

இன்னும் ஒரு படி மேல் சென்று ஆன்மீகப் பெரியோர்கள் சித்தர்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்றால்? சித்தர்களிடம் நாம் வழிபடும் பொழுது அவர்கள் நம்முடைய வழிபாட்டை கேட்டு கடவுளிடம் சொல்லுவதாகவும், கடவுள் அதை கேட்டு உடனடியாக நமக்கு அருள் செய்வதாகவும் கூறுகிறார்கள்.. ! 

ஆகவே கடவுளுக்கும் நமக்கும் இடையில் நேரடியாக ஒரு தெய்வீக சக்தி படைத்தவர்கள் தான் இந்த சித்தர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். 

எமது சொந்த வாழ்க்கையில் பல்வேறு அதிசயங்களை யாம்...  பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம் அதை எல்லாம் இங்கே குறிப்பிட்டால் ஏதோ இந்த பதிவிற்காக யாம் சுவாரசியப்படுத்தவே எழுதுவதாக படிப்பவர்கள் எண்ணலாம் ஆகவே அதை கடந்து செல்கிறேன்... 

    சித்தர்களில் இத்தனை பேர்கள்தான் இருந்தார்கள் என்று எந்த வரையறையும் வகுக்கப்படவில்லை பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் இங்கே வாழ்ந்ததற்கு உண்டான வரலாறுகள், ஜீவசமாதிகள் இருக்கின்றன.

ஆனால் பொதுவாக இங்கே சித்தர்கள் என்று குறிப்பிட்டால் 18 சித்தர்கள் என்று நமது நினைவுக்கு வருவதையும் நம்மால் தவிர்க்க இயலாது.Shiva Vishnu Tv 

அது என்ன பதினெட்டு சித்தர் என்பதற்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் அற்புதமான ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார் அந்த விளக்கத்தை அப்படியே உங்களுக்கு இங்கு கொடுக்கிறேன் ஓம் நமசிவாய 🙏

சித்தர்களைப் பற்றி சிந்திக்கும் போது 18 என்று ஒரு கணக்கு எல்லோருக்கும் நினைவுக்கு வரும் குறிப்பாக 18 சித்தர்கள் என்கிற எண்ணிக்கையும் நினைவு கூறும் அது என்ன 18 என்று ஒரு அளவு ஏன் அதற்கு மேலோகத்தில் இருக்கக் கூடாது என்றும் கேள்வி எழும் .

ஆனால் 18 என்பது ஒரு சூட்சுமமான எண் என்பது நமக்கு புரிந்தால் இந்த கேள்விகளே எழாது. 18 என்கிற இந்த கணக்குக்கு பின்னாலே நாம் சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ளன.

ஒன்று முதல் ஒன்பதுக்குள் எங்கள் முடிந்து விடுகின்றன. அதன் பின்வரும் பத்து முதல் பல கோடி வரையிலான எண்ணிக்கைக்கு தனியே என் வடிவம் கிடையாது. இந்த ஒன்று முதல் உள்ள 9 எண் வடிவங்களை பயன்படுத்தியே எத்தனை கோடிகளை கூட நாம் என் வடிவில் அடையலாம்.

இதில் ஒன்பதுக்கு மேலான முதல் பரிமாண வடிவம் தான் 18 ஆகும். அதாவது 9 முதல் உள்ள எட்டு இதை கூட்டினால் வருவது ஒன்பது ஆக இந்த '18' என்பதற்கும் ஒன்று முதல் 9 வகையான எண்கள் ஒளிந்துள்ளன. இதில் ஒன்பது மறைவாக ஒளிந்துள்ளது அதாவது ஒன்றையும் எட்டையும் கூட்டினால் தான் 9 வரும் இந்த ஒன்றுக்கும் எட்டுக்கும் இடையில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகியவை மறைந்து அடைந்து அல்லது கிடக்கின்றன.

இதை வேறு மாதிரியும் பார்க்கலாம் ஒன்றாகிய நாம் பஞ்சேந்திரங்களால் ஆளப்பட்டு இயக்குகிறோம் நம்முடைய ஆறாவது அறிவே சத்தம் கொண்ட பேச்சாக வெளிப்படுகிறது இந்த பேச்சாலே நாம் எட்டுவதும் எட்ட வேண்டியதும் இறைவனைத் தான் இறைவனே ஒன்பதாக நாம் சென்று ஒன்ப வேண்டியவனாக, அதாவது கலக்க தேவையான பரமாத்மாவாக உள்ளான்.

இந்த செய்தியை உள்ளடக்கமாகக் கொண்ட எண்ணே 18 ஆகும். அதனாலேயே சபரிமலையில் 18 படிகள்.... அந்த 18 படிகளுக்கு மேல் அதன் தொகுப்பு சக்தியாக அந்த ஐயப்பன் இருக்கிறான். அவன் சிவ விஷ்ணு சேர்க்கையால் உருவானவன். இதில் விஷ்ணுவின் மோகினி கோலம் என்பது சக்தி வடிவம். எனவே ஐயப்பனை நாம் எட்டும் போது சைவ, வைணவ, சாத்தம் என்றும் முப்பரிமாண மூர்த்தியாகவே அவன் இருப்பதால் நாம் பரம்பொருளை எட்டி விடுவதாக தான் பொருள் கொள்ள வேண்டும்.

பாரத யுத்தம் கூட 18 நாட்கள் தான் நடந்தது. பாரத யுத்தத்தை தர்மயுத்தம் என்பார்கள். இதில் பாண்டவர்கள் ஐவர் கௌரவர்கள் 100 பேர் அதாவது பஞ்சேந்திரியம் கொண்ட நாமே இங்கே பஞ்சபாண்டவர்கள். நம்முடைய ஆயுட்காலம் ஆகிய 100 ஆண்டு வாழ்க்கை என்பது தான் கௌரவர்கள் நமது வாழ்க்கையே ஒரு யுத்தம் தான். இதில் இந்திரியங்கள் அந்த கிருஷ்ணன் சொன்னபடி கேட்டால் கவுரவர்களான வாழ்நாளை வென்று விடலாம் அதற்கு நமக்கு உதவுவதுகூட 18 விதமான வழிமுறைகள் தான். இதை மறைவாக கூறுவதே பாரத யுத்தமும் அதன் 18 நாள் கணக்குமாகும்.Shiva Vishnu Tv 

இப்படி 18க்கு பின்னாலே சூட்சிமா பொருட்கள் நிறையவே உள்ளன. இதை வைத்தே 18 சித்தர்கள் என்று ஒரு கணக்கும் வந்தது. 18 சித்தர்கள் பெருமக்கள் சொன்னபடி நாம் நடந்தால் போதும். நாம் நம் பிறவி பெருங்கடலை சுலபமாக நடந்து விடுவோம். ஒவ்வொரு சித்தரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் போதும்! நான் கடைத்தேறிவிடலாம்.

 மேற்கண்டவாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் 18 என்கிற எண்ணிற்கும், சித்தர்களும், நம் வாழ்க்கைக்கும் உண்டான தொடர்பை, கணக்கை மிக எளிமையாகவும், அழகாகவும் வெளிப்படுத்துகிறார்.

இன்னும் சித்தர்கள் பற்றிய பல விஷயங்கள் இருக்கிறது அடுத்தடுத்து வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதற்கு முன் இந்த 18 சித்தர்கள் என்பவர்கள் யார் என்று அட்டவணை உங்களுக்கு தொகுத்து கொடுக்கிறேன் ஓம் நமசிவாய🙏 

1) அகத்தியர் மாமுனிகள் ( சித்தர்)
2) போகர் சித்தர்
3) கருவூரார் சித்தர்
4) கொங்கணர் சித்தர்
5) சுந்தரானந்தர் சித்தர்
6) குதம்பை சித்தர்
7) பதஞ்சலி முனிவர் ( சித்தர் ) 
8) பாம்பாட்டி சித்தர்
9) தன்வந்திரி சித்தர்                                                     10)  கோரக்கர் சித்தர்
11) திருமூலர் சித்தர்
13) மச்சமுனி சித்தர்
14) இடைக்காடர் சித்தர்
15) கமலமுனி சித்தர்
16) சிவவாக்கியர் சித்தர்
17) சட்டை நாதர் சித்தர்
18) இராமதேவர் சித்தர் 

மேற்குறிப்பிட்ட 18 சித்தர்களே பெரும்பாலும் 18 என்ற எண்ணிற்கு சொந்தக்காரர்களாக திகழ்கின்றனர். 

இந்த 18 என்ற எண்ணிக்கையில் அடங்காமல் இன்னும் எவ்வளவோ சித்தர்கள் இங்கே வாழ்ந்து ஜீவசமாதி ஆகி இன்னும் மக்களுடன் மக்களாக கடவுளுடன் கடவுளாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை. 

அப்படி இருக்கும் பல சித்தர்களைப் பற்றி நம்முடைய பதிவுகளில் விரிவாக பார்க்கவிருக்கிறோம்.
 நன்றி 🙏

 ஓம் நமசிவாய 🙏

Shiva Vishnu Tv 🙏






Comments