63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -13 அரிவாட்டாய நாயனார் 63 nayanmars

63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -13 
அரிவாட்டாய நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் அரிவாட்டாய நாயனார் அவர்களின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏



சோழர்களின் காவிரி நாட்டிலே கனமங்கலம் என்ற ஊரில் தாயனார் எனும் செல்வந்தர் வேளாளரின் தலைவராக வாழ்ந்து வந்தார். அவர் பெரும்  செல்வந்தராக இருந்த போதும் சிவபெருமானுக்கு தினமும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் உணவாக சிவபெருமானுக்கு படைத்து வந்தார். இப்படி சிவபெருமானுக்கு உணவு படிப்பதன் மூலம் சிவபெருமானுக்கு தான் தினமும் உணவு கொடுப்பதாக எண்ணி மிகவும் மகிழ்ச்சி உடையவராய் வாழ்ந்து வந்தார் தாயனார்.

 அதாவது தான் ஒரு நாள் சிவபெருமானுக்கு உணவு கொடுக்கவில்லை என்றாலும் அவர் பட்டினியாக இருப்பார் என்ற அளவிற்கு நமது பிள்ளைக்கு உணவு கொடுப்பதை போல அதை ஒரு கடமையாகவும், அன்பாகவும், பக்தியாகவும் எண்ணியே அவர் தினமும் உணவு படைத்து வந்தார்.

இப்படி அழகாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமானது... 

வழக்கம் போல் தன் திருவிளையாடலை ஆட ஆரம்பித்தார் சிவபெருமான். பிறகென்ன? செல்வந்தராக இருந்த தாயனார தன் செல்வங்களை இழக்க ஆரம்பிக்கிறார் செல்வங்கள் கரைகிறது தன்னுடைய விளைநிலத்தில் இருந்து  செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் எடுத்துச் சென்று சிவபெருமானுக்கு படைத்து வந்த தாயனார் தன் விளைநிலங்கள் அனைத்தும் தம்மை விட்டு சென்ற பிறகும் அதை தொடர்வதற்கு வழி தெரியாமல் விவசாயக் கூலி வேலைக்கு செல்கிறார் அதில் கிடைக்கும் கூலியில் செந்நெல் சிவபெருமானுக்கும் கார்நெல்லை தமது குடும்பத்திற்கும் வைத்துக் கொண்டு மீண்டும் தனது பக்தியை நிலைநாட்டினார் தாயனார்.Shiva Vishnu Tv 

இதைப் பார்த்த சிவபெருமான் "செந்நெல் எனக்கு கொடுத்துவிட்டு கார்நெல்லை நீ உண்கிறாய் அல்லவா இப்பொழுது பார்" என்ற படி அவர் கூலி வேலைக்கு செல்லும் வயல்களில் கார்நெல் விளையாத படி அனைத்தையும் செந்நெல்லாக விளைவிக்க செய்தார் அப்படி விளையும் பொழுது தாயனார் அவர்களுக்கு கிடைத்த கூலியில் முழுவதும் செந்நெல் ஆகவே இருந்தது அதை மனமார ஏற்றுக்கொண்டு இறைவனுக்காக அனைத்து செந்நெல் களையும் மகிழ்ச்சியுடன் படைத்து வந்தார் நாயனார். தமது கூலி நெல்களை இறைவனுக்கு படைத்து விட்டு அதாவது முழுவதுமாக படைத்து விட்டு தன் தோட்டத்தில் விளைந்த கீரைகளை சமைத்து கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டனர் . ஒரு கட்டத்தில் அந்த கீரைகளும் தீர்ந்து போய்விட...  அந்த காலங்களில் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்து இறைவனை மகிழச் செய்தார்.

ஒரு நாள் தாயனார அவர்கள் இறைவனுக்கு உணவு ஊட்ட அவரது அன்பு போன்ற தூய செந்நெல் அரிசியும், மாவடுவும், கீரையும் கூடையில் சுமந்து செல்ல ... அவரைப் பின்தொடர்ந்து அவரது மனைவியும் சென்றார். 

வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்து வந்ததன் காரணமாக உடலில் போதிய அளவு சக்தி இல்லாததால் கால் இடறி தாயனார் அவர்கள் கீழே விழுந்தார் .. கீழே விழும் பொழுதும் இறைவனுக்கு கொண்டு சென்ற உணவை தரையில் படாமல் எப்படியோ தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் இறைவனுக்கு கொண்டு சென்ற உணவு தரையில் விழுந்து விட்டது. Shiva Vishnu Tv 

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தாயனார் அவர்கள் தன் கையிலே வைத்திருந்த அறிவாலை எடுத்து தன் கழுத்தை அறுக்க ஆரம்பித்தார்... "இனிமேல் நான் வாழ்ந்து என்ன புண்ணியம்? மிகப்பெரிய தீமையை செய்து விட்டேன் நான் உணவு கொண்டு சென்று இறைவனுக்கு படைக்காவிட்டால் அவர் பசியோடு இருப்பாரே! இப்படி ஆகிவிட்டதே இனிமேல் நான் வாழ்வது தேவையற்றது" என்றபடி கழுத்தை கரகரவென்று அறுக்க ஆரம்பித்தார்.. 

இவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் தம்முடைய திருவிளையாடலை முடித்துக் கொள்ள ஆசைப்பட்டு கழுத்து அறுத்துக் கொண்டிருந்த தாயனார் அவர்களின் கைகளை பற்றினார்.

கணவன் மனைவி இருவருக்கும் காட்சி கொடுத்து இனி நீங்கள் எமது உலகத்திற்கு வந்து விடுங்கள் என்று அன்போடு அழைத்துக் கொண்டார். தம்முடைய இதயத்தில் வைத்துக் கொண்டார்‌. 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆக்கிக் கொண்டார் ... 

அரிவாள் கொண்டு தன் கழுத்தை அறுத்த காரணத்தால் தாயனார் என்ற பெயர் அரிவாட்டாய நாயனார் எனும் பெயரை பெற்றார் .

ஓம் நமச்சிவாய 🙏
Shiva Vishnu Tv 🙏


Comments