63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -14 - ஆனாய நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -14 
ஆனாய நாயனார்

இந்த பகுதியில் ஆனாய நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 

லால்குடியில் இருந்து வடமேற்கே நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலம் எனும் ஊரில் அவதரித்த ஆனாயர் பசுக்கள் மேய்த்து கொண்டிருக்கும் நேரங்களில் சிவபெருமானை மனதில் நினைத்து புல்லாங்குழல் இசைப்பதை வழிபாடாக கொண்டு வாழ்ந்தார். ஒருநாள் வழியில் கொன்றை மரத்தை கண்ட ஆனாயர் கண்களுக்கு அம்மரம் சடையில் கொன்றை மாலை அணிந்த சிவபெருமானாக தோன்றியது இறைவனை கண்ட மகிழ்ச்சியில் புல்லாங்குழல் எடுத்து நாட்கள் செல்வது கூட தெரியாத அளவுக்கு ஆணாயர் மெய் மறந்து வாசித்துக் கொண்டே இருந்தார் அவரது வாசிப்பில் விலங்குகளும், பறவைகளும், நகரங்களில் வசிப்பவரும், தெய்வங்களும், தேவர்களும் மெய் மறக்க அருவிகளும், காட்டாருகளும் ஓடாமல் நிற்க இயற்கையே மயங்கி போனது.

 இறுதியில் சிவபெருமானும் இசையில் மகிழ்ந்து உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சியளித்து ஆனாய நாயனாரை தம்முடன் அழைத்துக் கொண்டார்.

Comments