63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -15- மூர்த்தி நாயனார் 63 nayanmars


 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -15
மூர்த்தி நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பகுதியில் மூர்த்தி நாயனார் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 

மதுரையில் அவதரித்த மூர்த்தியார் மதுரை சோமசுந்தர பெருமாளுக்கு சந்தன காப்பு அணிவிக்கும் திருத்தொண்டினை செய்து வந்தார். மதுரையை வென்ற கர்நாடக அரசன் மூர்த்தியாரின் தெய்வப் பணியை கேள்விப்பட்டு சந்தன கட்டைகள் கிடைக்காத படி தடைவிதிக்க மனம் வருந்திய மூர்த்தியார் தம் முழங்கைகளை  சந்தன கட்டையாக கருதி கருங்கல்லில் தேய்த்தார் சதையும், எலும்பும் தேய்ந்து குருதி கொட்டுவதைக் கண்ட ஈசன் இன்றோடு தீமைகள் விலகுகின்றன இனி உன் திருப்பணி முடித்து சிவலோகம் அடைவாயாக என்று கூறினார்.

 பரமன் திருவுளப்படி மன்னன் இறந்துவிட அரசவை பட்டத்து யானையால் மாலை சூடப்பட்டு மூர்த்தியார் விபூதியையே அபிஷேகப் பொருளாகவும் சடை முடியை கிரீடம் ஆகவும் ருத்ராட்சமே ஆபரணமாகவும் கொண்டு ஆட்சி செய்து நாயனராக போற்றப்பட்டார்.

Comments