63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -16- முருக நாயனார் 63 nayanmars

63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -16
முருக நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் முருக நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 

முருக நாயனார் அவதரித்த திருப்புகலூரில் இருக்கும் வர்த்தமானேஸ்வரர் திருக்கோயிலில் ஆறு வேலைகளிலும் பூஜை நடக்கும் ஒவ்வொரு பூஜை காலத்திற்கும் ஒவ்வொரு வகை மாலைகளை இறைவனுக்கு சாற்றி பூஜை செய்வார்கள் முருகனார் தினமும் பூந்தோட்டத்தில் இருந்து கொடிப்பூ, கோட்டுப்பூ,  நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நான்கு வகையான பூக்களை பறித்து கோவிலுக்கு எடுத்துச்சென்று இண்டை மாலை, கோவை மாலை, பத்தமாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்குமாலை என்னும் ஆறு வகையான மாலைகளை தாமே கட்டி ஆறு பூஜை காலத்திற்கும் ஒவ்வொரு வகையான மாலையை வர்த்தமானேஸ்வரருக்கு சாத்துவித்து நெஞ்சுருவி சிவவாக்கியத்தை ஓதி மகிழ்வார்.

 முருகனார் திருஞானசம்பந்தருக்கு நண்பராகி பெருமை பெற்றவர் இறைவனுக்குச் செய்த திருத்தொண்டாலும் திருஞானசம்பந்தரின் நட்பாலும் ஈசன் திருவருளைப் பெற்று முருகர் நாயனராக போற்றப்பட்டார். 

Comments