63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -17 உருத்திரபசுபதி நாயனார் 63 nayanmars

63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -17
உருத்திரபசுபதி நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் உருத்திரபசுபதி நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

கொல்லுமாங்குடிக்கு கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலையூரில் வாழ்ந்த பசுபதியார் எப்போதும் சிவபெருமானின் திருவடிகளை தியானித்து வருவதை திருத்தொண்டாக கருதினார்.

திருத்தலையூரில் அழகான தாமரைக் குளம் ஒன்று இருந்தது. தாமரை பூக்கள் நிரம்பி இருந்த அக்குளத்தில் பசுபதியார் இறங்கி கழுத்தளவு குளிர்ந்த நீரில் நின்று கொண்டு தன் இரு கைகளையும் தலை மீது குவித்து கொண்டு மனம் உருகி சிவபிரானின் திருவடிகளை எண்ணி உருத்திர மந்திரத்தை தினமும் ஓதி வந்தார்.

மெய்யன்புடன் பசுபதியார் செய்து வந்த தவத்தின் பெருமையினையும் உருத்திர மந்திரத்தின் மகிமையினையும் கண்டு ஈசன் மகிழ்ந்து அவருக்கு திருவருள் புரிந்து தம்முடன் சேர்த்துக்கொண்டார் பசுபதியார் இறைவன் மீது கொண்ட பக்தியினால் குளிர்ந்த நீரில் தினமும் மணிக்கணக்காய் நின்று இரு கரம் கூப்பி சிவபெருமானின் திருவடிகளை அடைந்ததால் இவர் உருத்திர பசுபதி நாயனராக அழைக்கப்பட்டார்.

Comments