63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -18 - திருநாளைப்போவார் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -18
திருநாளைப்போவார் நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் திருநாளைப்போவார் நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

மயிலாடுதுறைக்கு கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேலாத நூனூரில் அவதரித்து பறையடிக்கும் தொழில் செய்து வந்த நந்தனார் சிவபக்தியோடு திருப்பன்கூர் ஆலயத்தின் வெளியே நின்று வணங்குகையில் இறைவனை காண முடியாமல் நந்தி மறைக்குதே என்று வருந்த ஈசனும் நந்தியை விலகச் செய்து அருளினார்.

நந்தனார் சிதம்பர நடராஜரை தரிசிக்க தில்லைக்கு நாளை போவேன் என்று பல நாள் கூறி வந்ததால் அவரை மக்கள் "திருநாளை போவார்" என்று அழைத்தனர்.

ஒரு நாள் சிதம்பரம் சென்ற நந்தனார் புலையனாகிய நான் எப்படி இந்நகருக்குள் சென்று இறைவனை தரிசிப்பது என்றெண்ணி, ஊர் எல்லையை சுற்றி சுற்றி வந்து அசதியில் தூங்க, ஈசன் கனவில் தோன்றி இப்பிறவி ஒழிய நீ தீயில் மூழ்கி தில்லைவாழ் அந்தணர்களுடன் என்னை வந்து அடைவாயாக என்று கூறினார்.

 அவ்வாறே அந்தணர்கள் கனவிலும் கூற அதை ஏற்று தீயினில் இறங்கி நந்தனார் மீண்டும் புண்ணிய முனிவராக எழுந்து நடராஜபெருமானை தரிசித்தார்.

Comments