63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 19 - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -19
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

காஞ்சிபுரத்தில் அவதரித்த சலவை தொழிலாளியான நாயனார் சிவனடியார்களுக்கு இலவசமாக துணி துவைத்து கொடுக்கும் தொண்டினை உலகறியச் செய்ய எண்ணி சிவபெருமான் ஒரு சிவனடியார் போல் வேடமிட்டு அழுக்கான ஆடையுடன் நாயனாரிடம் வர அடியாரின் நிலையை உணர்ந்த நாயனார் ஐயா, தங்கள் ஆடைகளை தாருங்கள் வெளுத்து தருகிறேன் என்று கேட்க அதற்கு அடியார் இந்த கந்தை ஆடையை மாலைக்குள் வெளுத்து தராவிட்டால் உன் உடம்பிற்கு தீங்கிழைத்த கொடுமைக்கு ஆளாவாய் என்று கூறி கொடுத்தார்.

நாயனார் துவைக்க முயலும் பொழுது ஆரம்பித்த மழை நின்ற பாடில்லை. மாலை பொழுதும் வந்துவிட சிவனடியாரின் மேனிக்கு துன்பம் இழைத்த நான் இருந்து என்ன பயன் என்றெண்ணி துணி துவைக்கும் கல்லில் மோத இறைவன் தாங்கி பிடித்து அருள் பாலிக்க இவர் பிறர் குறிப்பறிந்து சேவை செய்ததால் அன்று முதல் திருக்குறிப்பு தொண்ட நாயனராக போற்றப்பட்டார்.

Comments