63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -20 சண்டேசுவர நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 20
சண்டேசுவர நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் சண்டேசுவர நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 🙏

கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் அமைந்துள்ள திருச்சேய்ஞலூரில் அவதரித்த விசாரசருமர் மாடு மேய்க்க ஆரம்பித்ததில் இருந்து பசுக்கள் அளவுக்கு அதிகமாய் பால் கொடுத்தன.

முற்பிறவியின் உணர்ச்சியினால் விசார சருமருக்கு இப்ப சக்களின் பாலினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட மணியாற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து பாலைக்கறந்து தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டார்.

இதை கண்ட பசுக்களின் உரிமையாளர்கள் விசாரச் சருமறை கண்டிக்குமாறு தந்தை எச்சதத்தரிடம் கூற உண்மையை அறிய விசார சருமறை பின்தொடர்ந்து சென்று அபிஷேக பால் கொடுத்து எட்டி உதைக்க, உதைத்தவர் தன் தந்தை என அறிந்தும் விசாரசருமர் அவரது கால்களை வெட்டி வீழ்த்தினார்.

 உடனே சிவபெருமான் தோன்றி உனக்கு அம்மையும், அப்பனும் நானே என்று கூறி கொன்றை மாலையை தலையில் சூடி விசார சருமருக்கு சண்டேசுரப்பதம் அருளினார்.

Comments