63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -21 திருநாவுக்கரசர் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -21
திருநாவுக்கரசர் நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் திருநாவுக்கரசர் நாயனார் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 

பண்ருட்டி அருகே அமைந்துள்ள திருவாமூர் எனும் கிராமத்தில் அவதரித்த மருள்நீக்கியார் சமணத்திற்க்கு தொண்டாற்றி வருவதை கண்டு கவலையுற்ற மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார், இறைவனை வேண்ட, அவரது கனவில் சிவபெருமான் தோன்றி "மருள்நீக்கியாருக்கு சூலை நோய் தந்து மனந்திருந்த செய்வேன்" என்று கூறி மறைந்தார்.

அவ்வாறே மருள்நீக்கியாருக்கு சூலை நோய் ஏற்பட்டு சமணத் துறவிகளால் குணமடையாமல் போக அவர் திலகவதியாரை வந்தடைந்தார்.

திலகவதியார் சிவத்தொண்டு புரியுமாறு கூறி திருநீற்றை கொடுக்க அதை பூசிய மருள் நீக்கியாருக்கு சூலை நோய் மறைந்தது.

 "கூற்றாயினவாறு" என்னும் திருப்பதிகம் பாடினார் அப்பொழுது வாய் மணக்க பதிகம் பாடியதால் இன்று முதல் உன் பெயர் நாவுக்கரசு என்று வானில் குரல் ஒலித்தது தமிழர்கள் தூண்டுதலால் அரசன் நாவுக்கரசரை கருடன் கட்டி கடலில் எறிய நாயனார் "சொற்றுணைவேதியன்" எனும் பதிகம் பாடி கரை சேர்ந்தார்.

Comments