63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -22 குலச்சிறை நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -22
குலச்சிறை நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் குலச்சிறை நாயனார் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 

பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மணமேற்குடி எனும் ஊரில் அவதரித்த குளச்சிறை நாயனார் சிவ சின்னங்களான விபூதி, உத்திராட்சம், கோவணம் ஆகியவை அணிந்து நமச்சிவாய என்று உச்சரித்து வருகின்ற சிவனடியார்கள் எவராக இருந்தாலும் ஊர் எல்லையிலேயே இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதையே சிவ தொண்டாக கருதினார்.

 பாண்டிய மன்னன் ஆன நின்ற சீர் நெடுமாறனுக்கு முதல் அமைச்சராகவும் மன்னனின் மனைவி மங்கையர்கரசி அம்மையாரின் திருத்தொண்டிற்கு உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

 நெடுமாறனின் ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் பகைவர்களை ஒழிக்க திட்டங்களை தீட்டி தந்தார் திருஞானசம்பந்தரின் நட்பையும் பேராதரவையும் பெற்ற இவர் 63 நாயன்மார்களில் குளச்சிறை நாயனராக போற்றப்பட்டார்

Comments