63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -23 பெருமிழலை குறும்ப நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -23
பெருமிழலை குறும்ப நாயனார்

63 நாயன்மார்கள் வரிசையில் இந்த பதிவில் பெருமிழலை குறும்ப நாயனார் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் 

புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் வழியில் அமைந்துள்ள பெருமிழலை எனும் ஊரில் அவதரித்த பெருமிழலை குரும்பர் உலகம் முழுவதும் பரவி இருக்கும் சிவனடியார்களை பற்றி தெரிந்து கொள்ள பெரிதும் ஆசைப்பட்டார்.

இதன் அடிப்படையில் திருத்தொண்டர் பதிகம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அளவு கடந்த பக்தி கொண்டார். குறும்பர் அட்டமா சித்திகளையும், நமசிவாய என்னும் மந்திரத்தை உணவாகவும், உயிராகவும் கொண்டு இமைப்பொழுதும் துதித்தும் யாகப் பயிற்சியில் மகா பெரியவர் ஆனார்.

 சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் திருக்கைலாய வாழ்வளிக்கப் போகிறார் என்பதை தன் யோக சக்தியினால் உணர்ந்த குறும்பர் என் கண்ணுக்கு கண்ணான குருவைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன் என்று கூறி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு கரணங்களையும் ஒன்றுபடுத்தி தனது சிரசின் வழியாக தன் ஆன்மாவை வெளியேற்றி கபாலம் மோட்சம் அடைந்தார் அன்று முதல் இவர் பெருமிழலை குரும்ப நாயனராக அழைக்கப்பட்டார்.

Comments