63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 26 திருநீலநக்க நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 26
திருநீலநக்க நாயனார் 

சன்னாநல்லூரில் இருந்து நாகூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருச்சாத்தமங்கை எனும் ஊரில் அவதரித்த திருநீலநக்க நாயனார் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து கொண்டிருக்கும்போது சிலந்தி ஒன்று அயவந்திநாதர் மீது விழ அதை கவனித்த திருநீலநக்கரின் மனைவி வாயால் ஊதி விரட்டும் போது அயவந்திநாதர் மீது உமிழ்நீர் தெறித்து விட இதை கண்ட திருநீலநக்கர் உண்மை புரியாமல் மனைவியை திட்டி இனி என்னோடு வாழ உனக்கு தகுதி இல்லை என்று கூறி பிரிந்து வீட்டிற்கு செல்ல.....

 அவரது மனைவி கோவிலிலேயே தங்கி விட்டார் இரவில் தூங்கிய திருநீலநக்கரின் கனவில் ஈசன் தோன்றி உமது மனைவி என் மேனியில் ஊதிய இடம் தவிர மற்ற இடமெல்லாம் சிலந்தி கொப்பளம் வந்துள்ளது பாரு என்று கூறி மறைய....


 காலையில் திருநீலநக்கர் கோவில் சென்று இறைவனிடம் மனம் வருந்தி வேண்டி தன் மனைவியுடன் வீடு சென்று சிவத்தொண்டு புரிந்து திருநீலநக்க நாயனாராக போற்றப்பட்டார்.

Comments