63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -27 நமிநந்தியடிகள் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -27
நமிநந்தியடிகள் நாயனார் 

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் அமைந்துள்ள ஏமப்போரூரில் அவதரித்த நமிநந்தியடிகள் ஒரு சிவ பக்தர். ஒரு நாள் நமிநந்தியடிகள் இரவு பொழுதில் அரிநெறியப்பர் ஆலயத்தில் நெய் விளக்கேற்ற விரும்பினார் அப்பொழுது அவரிடம் நெய் இல்லாததால் பக்கத்து வீட்டில் நெய் கேட்க அவர்கள் சமணர்கள் என்பதால் நெய் இல்லை என்று கூறி தண்ணீரை கொண்டு விளக்கெரிக்க வேண்டியது தானே என்று ஏளனம் செய்தனர்.

 அப்பொழுது "நமிநந்தியே அருகில் உள்ள குளத்து நீரை கொண்டு விளக்கெரிய நான் அருள் செய்வேன் என்று அசரீரி கேட்க நமி நந்தியடிகள் குளத்து நிறை ஆலய விளக்குகளுக்கு ஊற்றி தீயிட்டு தீபம் ஏற்ற தீபங்கள் ஒளி விட்டு எறிந்தன.

 இதை அறிந்த சோழ மன்னன் அறநெறியப்பர் ஆலயத்திற்கு பூஜை பொருட்களை வழங்கி திருவாரூர் தியாகேச பெருமாளுக்கு திருத்தொண்டு நடைபெற நமிநந்தியடிகளையே தலைவராக நியமித்தார் அன்று முதல் நபி நந்தியடிகள் நாயனராக போற்றப்பட்டார்.

Comments