63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -29 ஏயர் கோன் கலிக்காம நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -29
ஏயர் கோன் கலிக்காம நாயனார் 

    திருப்புன்கூர் அருகில் அமைந்துள்ள திருமங்கலம் எனும் ஊரில் அவதரித்த கலிக்காமல் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை பறவை நாச்சியாரிடம் தூது அனுப்பிய செய்தி கேட்டு கோபம் கொண்டார் இருவரையும் ஒன்று சேர்க்க ஈசன் கலக்காமருக்கு சூலை நோய் தந்து கனவில் தோன்றி சுந்தரரால் நோய் தீரும் என்றார் இறைவனையே ஒரு பெண்ணிடம் தூது விட்டவரால் நோய் தீர வேண்டுமெனில் அது தேவையில்லை என்று மறுத்து விட இறைவன் சுந்தரமூர்த்தியாரின் கனவில் தோன்றி கலிக்காமலின் சூலை நோயை அகற்று என்று கூற சுந்தரர் திருப்புன்கூர் வந்தார். இதையறிந்த கலிக்காமர் இவரால் நோய் தீருவதை விட தன் உயிரை விடுவது மேல் என்றெண்ணி உடைவாளால் தன் உடம்பை கிழித்து உயிர் துறக்க, அங்கு வந்த சுந்தரர் நடந்ததையரிந்து அவரும் உயிர் விட வாளை எடுத்தார். அப்போது சிவனருளால் கலிக்காமர் உயிர் பெற்று சுந்தரரைத் தடுத்தார். சிவனார் மீது பக்தி வைராக்கியத்தால் இவர் நாயனாராக போற்றப்பட்டார்.

Comments