63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -30 திருமூல நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 30
திருமூல நாயனார்

திருவாடுதுறை அருகில் அமைந்துள்ள சாத்தனூரில் அவதரித்த மூலர் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற பொழுது ஒருநாள் பாம்பு கடித்து இறந்து விட பசுக்கள் வருந்தி நின்றன.

திருநந்தி தேவரின் திருவருள் உபதேசம் பெற்ற நான்மறை சுந்தரர் அங்கு வந்தார். அவர் பசுக்களின் துயர் போக்க எண்ணி தன் அட்டமாசித்தியினால் தன் உடலை விட்டு நீங்கி இறந்த மூவரின் உடலில் புகுந்து திருமூலராக உயிர்த்தெழுதல் கண்ட பசுக்கள் மகிழ்ந்தன பின்னர் தன் தொழுவங்களை அடைந்தது.

மூலரின் உடலில் புகுந்த நான்மறை சுந்தரர் மூலரின் மனைவியை அறியாதது போல் நின்றதால் மூலரின் மனைவி சந்தேகப்பட்டு ஊரைக் கூட்ட அவர்கள் மூலர் ஞானநிலை அடைந்து விட்டார் என்று கூறினர்.


மூலரின் உடலில் உள்ள நான்மறை சுந்தரர் தனது உடலை தேடிச் செல்ல அது காணாது போகவே அவர் இது ஈசனின் செயல் என்றெண்ணி திருமூலரின் உடலிலே நிலைபெற்று திருவாடுதுறையில் ஒரு பெரிய அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்து வருடத்திற்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை பாடி அருளினார். இதுவே திருமந்திரம் எனப்படும்.


Comments