63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -31 தண்டியடிகள் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 31
தண்டியடிகள் நாயனார் 

திருவாரூரில் அவதரித்து பார்வையற்றவராகி தண்டியடிகள் திருவாரூர் குளத்தை தூர்வார அதை சமணர்கள் தடுத்து குருடன் என்று ஏளனம் செய்ய.....

 தண்டியடிகள் "நான் கண் பார்வை பெற்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க அவர்கள் ஊரைவிட்டு செல்வோம் என்று கூற தண்டியார் இறைவனிடம் மன்றாட கனவில் ஈசன் தோன்றி "நீ பார்வை பெற்று சமணர்கள் பார்வை இழப்பர்" என்று கூற அது போல் சோழ மன்னன் கனவிலும் கூறியதோடு திருக்குலப்பணியை செய்வாயாக என்றும் கூறினார்.

மறுநாள் அரசன் முன்னிலையில் தண்டியார் நான் பார்வை பெற்று இவர்கள் ஊரை விட்டு செல்லும் வரை பார்வை இழப்பர் என்று கூறி திருமந்திரம் ஓதி மன்னன் முன்னிலையில் குளத்தில் முழுக தண்டியார் பார்வை பெற்று சமணர்கள் பார்வை இழந்தனர் எனவே இவரும் நாயனராக போற்றப்பட்டார்.

Comments