63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -33 சோமாசிமாற நாயனார் 63 nayanmars


 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -33
சோமாசிமாற நாயனார் 

அப்பளம் மாகாளம் எனும் ஊரில் அவதரித்த சோமாசிமாரர் சிவபெருமானை போற்றும் சிவ யாகத்தினை விதிமுறைப்படி உலகம் இன்புறும்படி செய்யும் பேறுபெற்றவர்.

சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குவதையே  பேரின்பமாக கருதுபவர். தம்மிடம் வரும் அடியார்களது குலம், நலம், பண்பு விசாரியாது அவரே நம்மை ஆட்கொள்ள உரியவர் என்று கருதுபவர்.

திருவைந்தெழுத்தினை ஓதுவதை நித்திய கடனாக கருதுபவர். சோமாசிமாரர் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் பக்தி கொண்டு அவரைக் காண திருவாரூர் சென்று சுந்தரரோடு நட்பு கொண்டு அவரது திருவடிகளை பற்றுக் கோடாகக் கொண்டார்.

ஐம்புலப் பற்றுகளையும் விடுத்து ஆறுவகைக் குற்றங்களையும் போக்கி சைவ நெறியில் சேர்ந்து.‌‌ .. இதுவே உய்யும் வழி என்று துணிந்து சுந்தரர் திருவடிகளை போற்றி வந்தார்.

இதனால் சிறப்பு வாய்ந்த சிவலோகத்தினை அடைந்து முக்தி பெற்று... சோமாசிமாரர் நாயனாராக போற்றப்பட்டார் 🙏

Comments