63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -34 சாக்கிய நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 34
சாக்கிய நாயனார் 

காஞ்சிபுரம் அருகில் அமைந்துள்ள திருச்சங்க மங்கை எனும் ஊரில் அவதரித்த சாக்கியர் மெய்ப்பொருளை ஆராய்ந்து முக்தி பெற பௌத்த நூல்களை கற்றார்.

 எந்த சமயமும் முடிவும் உண்மை பொருளை காட்டாது சிவ நன்னெரியே உண்மை பொருளை காட்டும். ஒருவன் எக்கோலத்திலும் என் நிலையிலும் ஈசன் திருவடிகளை மறவாதிருத்தலே உறுதிப்பொருள் என்பதை உணர்ந்து சிவபெருமானை வணங்க தொடங்கினார்.

 ஒரு நாள் புதிய இடத்தில் சிவலிங்கத்தை கண்டதும் அர்ச்சனை செய்ய விரும்பினார் அங்கே பூக்கள் இல்லாததால் கீழே கிடந்த கற்களால் அர்ச்சனை செய்தார்.

 சிவலிங்கத்தின் மீது கற்களால் அர்ச்சனை செய்த பின்னரே உண்ணுவதை பழக்கமாக வைத்திருக்க ஒருநாள் மறந்து போய் சாப்பிட நினைக்க உடனே கவலையுடன் ஒரு பெரிய கல்லெடுத்து பெருமான் மீது எறிந்து துதிக்க, ஈசன் அன்பை ஏற்று காட்சி தந்தருள இவரும் நாயனராக போற்றப்பட்டார்.

Comments