63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -35 சிறப்புலி நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -35
சிறப்புலி நாயனார் 

மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருஆக்கூரில் அவதரித்த சிறப்புலி நாயனார் நீலகண்ட பெருமாளுக்கு திருத்துண்டு புரிந்து வந்தார்.

சிவனடியார்கள் தம்மை வந்தடைந்த போது அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்கி நல்ல உணவு அடியார்களுக்கு கொடுப்பார்.

அவர்கள் விரும்புவன யாவற்றையும் மேகம் போல வரையாது வழங்கி புகழ்பெற்றவர். சிறப்புள்ளையார் சிவபெருமான் திருவடிகளிடம் அன்பு கொண்டு திருவந்த எழுத்தினை நாள்தோறும் ஓதி நித்யாகினியாகிய முத்தினை வளர்த்து வந்தார்.

இவர் நல்ல சிவ வேள்விகளை எல்லாம் சிவபெருமானை குறித்தே செய்தார். சிவனடியார்களுக்கு இல்லை என்று எண்ணாமல் கொடுத்து வந்தார். இவ்வாறு பல புண்ணிய காரியங்களைச் செய்து புகழும் சிறப்பும் பெற்ற தன்மையினால் சிறப்புலி நாயனராக போற்றப்பட்டு சிவபெருமான் திருவடி நிழலிலே நிலை பெற்றிருந்தார்.

Comments