63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -39 கூற்றுவ நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -39
கூற்றுவ நாயனார் 

திருத்துறைப்பூண்டி அருகில் அமைந்துள்ள திருக்களந்தையில் பிறந்த கூற்றுவர் குறுநில மன்னர் நிலைக்கேற்ப தோல் வலிமை படைத்து பகைவருக்கு கூற்றுவராய் திகழ்ந்தாலும் தன் தலைக்குச் சூட்டும் திருமுடி இல்லாதவராய் இருந்தார்.

 இக்குறையை போக்க கூற்றுவர் தில்லை அந்தணர்களிடம் சென்று நவரத்தினங்கள் பதித்த அரசமுடி ஒன்று சூட்டி விட வேண்டினார். 

அதற்கு அவர்கள் சோழர்குல முதல்வருக்கே அன்றி பிறருக்கு சூட்ட மாட்டோம் என்று மறுத்து சேர நாட்டிற்கு சென்று விட்டனர்.

இதனால் மனம் சோர்ந்து கூற்றுவர், சிதம்பரத்தில் ஈசனின் திருவடிகளை வணங்கி "தேவரீருடைய திருவடியையே மணிமுடியாக அடையும் போது அடியேனியின் அரசு முடிபெற வேண்டும்" என்று கூறி உறக்கம் கொள்ள சிவபெருமான் கனவில் தோன்றி தமது திருவடிகளையே முடியாத சூட்டியருளினார் திருவடிகளையே மணிமுறையாக தாங்கி நல்லாட்சி புரிந்தார்.

Comments