63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 40 பொய்யடிமையில்லாத புலவர்கள் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 40
பொய்யடிமையில்லாத புலவர்கள் 

பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்போர் நீலகண்ட பெருமானின் திருமலரடிக்கே ஆளானவர்கள்.

அதுவே மெய்யுணர்வின் பயன் என்று துணிந்து விளங்கியவர்கள். இவர்கள் செய்யும் திகழும் சொற்களைப் பற்றித் தெளிவும் செம்மை தரும் பயனுடைய நூல்கள் பலவற்றை பயின்ற ஆய்வுணர்வும் உடையவர்கள். 

அவைகளால் பெரும் மெய்யுணர்ச்சியின் பயன் சிவபெருமானின் மலரடிகளை வணங்குவதே என்ற கருத்தின் வழி நின்று தொண்டாற்றியவர்கள்.

சிவபெருமானின் செயலையின்றி வேறு எதையும் வாய் திறந்து பாடாத நெறியில் நின்று தொண்டு செய்த மெய்யடிமையுடையவர்கள் .

கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பெரும் புலவர்களே பொய்யடிமையில்லாத புலவர்கள். கலைகள் யாவும் ஓதியுணர்ந்த அவர்கள் கவிகள் பாடுவதில் வல்லவர்கள். தில்லை நடராஜப் பெருமானின் திருவடிகளை வணங்கும் பண்புடையவர்கள் 🙏🙏🙏
 

Comments