63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -42 நரசிங்க முனையரைய நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -42
நரசிங்க முனையரைய நாயனார் 

பண்ருட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள திருநாவலூரில் அவதரித்த மன்னர் நரசிங்கமுனையரையர்.

இவர் திருவாதிரை நட்சத்திரம் தோறும் சிவபெருமானுக்கு விசேஷ பூஜை செய்து அந்நாளில் தம்மை தேடி வரும் திருநீரணிந்த தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் 100 பொற்காசுகள் கொடுத்தும் உணவு கொடுத்தும் வழிபடுவார்.

இவ்வாறு வழிபட ஒரு நாள் காம நோயின் அறிகுறிகள் தெரியும் மேனியுள்ள ஒருவர் திருநீற்றுணை அணிந்து வர பக்கத்தில் இருந்தவர்கள் திட்டி ஒதுங்க இதை கண்ட முனையறையர் அவரிடம் சென்று வணங்கி உபசரித்தார் நரசிங்கமுனை அரையர் நல்லொழுக்கம் இல்லாதவர்களாகினும் திருநீற்று அணிந்த அடியார்களை உலகத்தார் எழுந்து அதனால் கொடிய நரகத்தில் விழாது உய்ய வேண்டும் என்றெண்ணி அவருக்கு 200 பொற்காசுகள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். 

இவர் நரசிங்கமுனையரையர் நாயனாராக போற்றப்பட்டார் 🙏

Comments