63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -43 அதிபத்த நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -43
அதிபத்த நாயனார் 

நாகப்பட்டினத்தில் உள்ள நம்பியான் குப்பத்தில் அவதரித்த அதிபத்தர் மீன்பிடித் தொழில் செய்த பொதிலும் சிவ தொண்டராக வாழ்ந்து வந்தார்.

 அதிபத்தர் தினமும் மீன் பிடிக்கும் போது வலையில் அகப்படும் மீன்களில் முதல் மீனை சிவபெருமானுக்கு என்று கடலில் வீசிவிடுவார்.

 அதிபத்தருடைய சிவபக்தியை உலகிற்கு உணர்த்த எண்ணிய ஈசன் பல நாட்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கச் செய்தார். 

அதிபத்தரும் வழக்கப்படி ஒரு மீனையும் சிவபெருமானுக்கு என்று விட்டுக் கொண்டே வந்தார் அதனால் வறுமையில் வாடினார்.

 ஒருநாள் வலையில் நவரத்தினங்களால் ஆன பொன்மீன் கிடைக்க அதையும் இறைவனுக்கு சொந்தமானது என்று கடலில் வீசிவிட்டார். விலை உயர்ந்த பொன்மீன் கிடைத்த போதிலும் சிவ பக்தியினால் தியாகம் செய்த அதிபத்திற்கு சிவபெருமான் காட்சியளித்து அருளினார் இவரும் அதிபத்த நாயனராக போற்றப்பட்டார்.

Comments