63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -44 கலிகம்ப நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 44
கலிகம்ப நாயனார் 

விருத்தாசலத்தில் இருந்து ஜெயம்கொண்டான் செல்லும் வழியில் பெண்ணாகடம் எனும் ஊரில் அவதரித்த கலிக்கம்பர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு அன்னம், கறி வகைகள், நெய், தயிர், பால் ஆகியவற்றை கொடுத்து திருப்பாத பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

ஒரு நாள் கலிக்கம்பர் சிவனடியார்க்கு பாதபூஜை செய்து கொண்டிருக்கும் வேளையிலே அவரின் மனைவி உணவுகளை எடுத்துக் கொண்டு பரிமாறுவதற்காக வந்தார்.

அப்போது தன்னுடைய கணவர் பாத பூஜை செய்யும் சிவனடியாரை கண்டதும் வெறுப்பு தோன்றியது. ஏனில் அச்சிவனடியார் கலிக்கம்பரின் வேலையாளாக இருந்தவர்.

அதனால் பாத பூஜைக்கு நீர் ஊற்றாமல் கலிக்கம்பரின் மனைவி நின்றார். சிவனடியாருக்கு பாத பூஜை செய்து வழிபட மறுக்கும் கலிக்கம்பர் தன் மனைவியாரின் மீது கோபம் கொண்டு அறிவாலால் மனைவியின் கைகளை வெட்டி எறிந்து பின்னர் எல்லா வழிபாட்டு முறைகளையும் தானே செய்தார்.

இவ்வாறு திருத்தொண்டியின் வழியில் வழுவாது நின்று கலிக்கம்ப நாயனாராக போற்றப்பட்டார். 

Comments