63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -46 சத்தி நாயனார் 43 nayanmar


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -46
சத்தி நாயனார் 

வேலூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் அமைந்துள்ள வரிஞ்சையூரில் அவதரித்த சக்தி நாயனார் தன்னைத் தேடி வரும் சிவனடியார்களை வரவேற்று விருந்துண்ண செய்து பொன்னும், பொருளும் கொடுப்பார்.

நெற்றியில் எப்பொழுதும் திருநீற்று மகிமை மணந்து கொண்டே இருக்கும் சக்தி நாயனருக்கு இன்னொரு பண்பும் இருந்தது.

அது மூர்க்கத்தனமாக இருந்தாலும் அதுவும் சிவனடியாரிடம் கொண்ட அன்பே யாகும். சிவபெருமானை பற்றியோ, அவரது அடியார்களை பற்றியோ எவராவது இகழ்ந்து பேசினால் உடனே இகழ்ந்து பேசிய மனிதரை அவர் எட்டிப் பிடித்து இழுத்து அவரது நாக்கினை அறுத்து எறிந்து வடுவார்.

நாக்கை அறுப்பதற்கு என்று ஒரு கத்தியும், தண்டாயம் என்ற இடுக்கியும் எப்போதும் தன்னிடத்தில் வைத்திருந்தார். சிவபெருமானது அடியார்க்கு நலம் கூறாதோரின் நாக்கை அறுத்து திருத்துண்டு செய்து வந்த சக்தியனார் அம்பலவாணரின் திருவடி அறிந்து சக்தி நாயனாராக போற்றப்பட்டார்.

Comments