63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -47
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 


காஞ்சிபுரத்தில் அவதரித்து அரசாட்சி செய்து வந்த ஐய்யடிகள் சிவனடியார்களுக்கு தனது நாட்டில் பெரும் மதிப்பினையும் உயர்வான வாழ்க்கையும் கொடுத்து வந்தார்.

பகைவர் நாட்டிலிருந்து சிவனடியார்கள் வந்தால் கூட அன்பும், அருளும் செலுத்தி உபசரித்து வந்தார். சிவ நெறியில் ஆட்சி புரிந்த ஐய்யடிகள் ஆட்சியைத் துறந்து மகனுக்கு முடிசூட்டிவிட்டு சிவநெரியில் நின்று திருத்தொண்டினை விரும்பி செய்யலானார்.

ஐய்யடிகள் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயில்கள் எல்லாவற்றையும் தரிசித்து வணங்கி ஒவ்வொரு திருத்தலத்தின் மீதும் ஒவ்வொரு வெண்பா பாடி துதித்தார்.

 தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெல்லாம் சிவாலயங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று இறைவனை வணங்கி மக்களிடம் இறை பணியையும் ஆற்றி வந்தார். இச்செயல்களால் ஐய்யடிகள் காடவர்கோன் நாயனார் எனப்பட்டார்.

Comments