63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -48 கணம்புல்ல நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 48
கணம்புல்ல நாயனார் 

வாழப்பாடி அருகே ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இருக்கு போளூரில் அவதரித்த கனம்புல்லர் சிவபெருமான் திருக்கோவிலுக்கு திருவிளக்கேற்றி தவறாது துதித்து வந்தார்.

அவர் ஈசன் அருளால் வறுமையுற தன் வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் விற்று திருப்புலிச்சர கோயிலில் விளக்கெரிக்கும் பணியினை செய்து வந்தார்.

வீட்டு பொருட்களும் தீர கனம்புல்லர் கனம் புல்லினை அறுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தினால் என்னை வாங்கி விளக்கேற்றி வந்தார். இதனால் இவர் கணம்புல்லர் என பெயர் பெற்றார்.

ஒரு நாள் கணம் புல்லர் மெய்வருத்த புள்ளை விற்க விலை போகாததால் புல்லால் விளக்கெரித்தார். ஆனால் விளக்கு முதல் ஜாமம் வரை எரிக்க இயலாததால் இரு வினையாகிய பாசத் தொண்டினை எரித்தவராகிய கணம்புல்லர் தன் திருமுடியினை அன்பினால் எலும்பும் கரைந்துருக தீட்டி எரிக்க சிவபெருமான் காட்சி கொடுத்தார். 

இவர் கணம்புல்லர் நாயனார் எனப் போற்றப்படுகிறார்.

Comments