63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -49 காரி நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -49
காரி நாயனார் 

திருக்கடவூரில் அவதரித்த காரியார் சிவலிங்க வழிபாட்டை போற்றி வந்தவுடன் தன் தமிழ் புலமையினால் சொற்கள் விளக்கமாகி உள்ளுறை பொருளாகிய வீடு பேற்றின் நிலை வெளி தோன்றாமல் பொருள் மறைந்து கிடக்கும் படி காரிக்கோவை என்னும் தமிழ் நூலை இயற்றினார்.

இதை அறிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் நட்பினை பெற்று அவர்கள் மகிழும் வண்ணம் பொருளுக்கு ஏற்ற சொற்களை உரைநயம் பெறக் கூறி, அவர்களால் பெரும் செல்வங்களைப் பெற்று பல சிவாலயங்கள் கட்டினார்.

சிவனடியார்களை வரவேற்று உபசரித்தார். மேலும் பிறரிடம் சென்று பெறுவதில் கூச்ச உணர்வோடு இருக்கும் சிவனடியார்களின் வீடு சென்று பொன்னும், பொருளும் கொடுத்து உதவினார் தனக்கு கிடைத்தவற்றையெல்லாம் சிவதொண்டிற்காகப் பயன்படுத்திய காரியர் காரி நாயனராக போற்றப்பட்டார்.

Comments