63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -50 நின்ற சீர்நெடுமாற நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -50
நின்ற சீர்நெடுமாற நாயனார் 

மதுரையில் அவதரித்து மங்கையர்கரசி யாரை மணந்து நின்ற சீர் நெடுமாறர் சமணர்களால் மனமாற்றம் செய்யப்பட்டு சமணத் தொண்டாற்றி வந்தார்.

பின்னர் ஒருநாள் திருஞானசம்பந்தர் திருவடிகளை அடைந்து சைவத்தை மேற்கொண்டு கூன்பாண்டியராக விளங்கிய இவர் நின்ற சீர் நெடுமாறனாக சிவபெருமானிடத்தும், சைவ நன்னெறிகளிடத்தும் பக்தி கொண்டு திருப்பணி மேற்கொள்ள ஆரம்பித்தார்.

திருஞானசம்பந்தரால் பாண்டி நாடு முழுவதும் சிவ மனம் பெருகுமாறு ஆட்சி செலுத்தினார் நெடுமாறனார் வடநாட்டு பகை அரசர்களை நெல்வேலி போர்க்களத்தில் வென்று வெற்றி வாகை சூடி அரச படை வலிமையையும் நிலைநிறுத்திக் கொண்டவர்.

 அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் சிவாலயத்தை கட்டிய மன்னராவார். அரசர் நெடுமாறர் சிவதொண்டுகளை எல்லாம் சிறப்புறும்படி விளங்கச் செய்து சிவபெருமான் திருவருளால் சிவலோகத்தினை அடைந்து நின்ற சீர் நெடுமாற நாயனராக போற்றப்பட்டார்.

Comments