63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -51 வாயிலார் நாயனார் 63 nayanmars


 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 51
வாயிலார் நாயனார் 

சென்னையில் உள்ள திருமயிலையில் அவதரித்த வாயிலார் சிவபெருமானுக்கு திருத்தொண்டு புரிவதில் பெரு விருப்புடன் விளங்கினார்.

வாயிலார் என்ற பெயர் இறைவனை அடைந்து நன்மை பெறுவதற்கு வாயிலாக ( வாசற்கதவாக) இவர் உள்ளார் என்பதாகும்.

 மறவாமையாகிய கருவினால் அமைந்த மனமாகிய கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருள்வித்து நிலை பெற சாபித்து பெருமானை உணரும் ஞானம் என்கிற சுடர் விளக்கினை ஏற்றி பேரானந்தம் ஆகிய திருமஞ்சனம் மாட்டி அன்பு என்னும் திருவமுகனதை அமைத்து ஞானப் பூசையினை நாள்தோறும் செய்து வந்தார்.

 இவ்வாறு வாயிலார் மனதில் அகப்பூசையினால் சிவபெருமானை அன்போடு நெடுங்காலம் வழிபட்டு சிவபெருமான் திருவடி நிழலை அடைந்தார் சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் பெரும் பக்தி கொண்டு திருத்துண்டு செய்து வந்தவர் வாயிலார் நாயனார் எனப்பட்டர்.

Comments