63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -52 முனையடுவார் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 52
முனையடுவார் நாயனார் 

மயிலாடுதுறை அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீடூரில் அவதரித்த முனையடுவார் படைவீரர்களுக்கு சேனாதிபதியாக இருந்தவர்.

அக்காலத்தில் வீரர்கள் ஒன்று கூடி ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டு அரசர்களுக்கு தேவைப்படும் போது போர்க்களத்திற்கு சென்று நாட்டிற்காக போராடி வெற்றியை குவிப்பர்.

போரில் தோற்றவர்கள் மீண்டும் முனையடுவாரிடம்  வந்து பெரும் பொருள் கொடுத்து அவரை நாடினால் நடுநிலையில் நின்று ஆராய்ந்து தோற்றவருக்காக போர் செய்து வெற்றியை தேடித் தருவார்.

முனையடுவார் பகைவர்களை போரில் வென்று பெற்ற பொருட்களை எல்லாம் சிவனடியார்களுக்கு வழங்குவார் மற்றும் வெள்ளம், நெய், கறி, தயிர், பால், பழம் முதலியவற்றுடன் திருவமுது அளித்து வந்தார்.

முனையடுவார் மெய்வருந்த கூலி பெற்றாலும் அதனை அடியார்களுக்கு அளித்து சிவத்தொண்டினை செய்து சிவநெறியில்  நின்று ஈசனின் அருளை பெற்றவர். இச்சிறப்பால் முனையிடுவார் நாயனாராக போற்றப்பட்டர்


Comments