63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 53 கழற்சிங்க நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 53
கழற்சிங்க நாயனார் 

காஞ்சிபுரத்தில் அவதரித்த கழர்சிங்கர் ஒரு நாள் தன் ராணியுடன் திருவாரூர் புற்றிடங்கொண்ட சிவபெருமானை வணங்க ஆலயத்திற்கு சென்றார்.

அப்பொழுது ராணி கலை அழகு மிக்க மண்டபத்தில் சிற்ப வேலைபாடுகளை பார்த்துக் கொண்டு வந்த பொழுது வாசனை மிக்க மலர் ஒன்று எடுத்து நுகந்தார்.

 அதை கண்ட செருத்துனை நாயனார் நாயனார் எம்பெருமானின் அழகு மேனிக்கு சூடி மகிழும் மலரை நுகர்வது கொடிய குற்றம். இனி இம்மலர்களை எப்படி சாத்துவது என கோபம் கொண்டு ராணியின் மூக்கினை அறுத்து எடுக்க ராணி கீழே சாய்ந்தாள்.

சிவபெருமானை தரிசித்து விட்டு கழர்சிங்கர் அங்கு வர... செருத்துனையார் நடந்ததை கூற மன்னர் "மலரை நுகர்ந்தது குற்றம் தான்.

முதலில் மலரை எடுத்தது இவளது கை தான்" அதை வெட்டி வீழ்த்துவது தான் முறை என்று கூறி தனது வாளால் ராணியின் கரத்தை வெட்டி வீழ்த்தினார். இச்செயலால் கழற்சிங்க நாயனாராக போற்றப்பட்டார் 🙏

Comments