63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 54 இடங்கழி நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 54
இடங்கழி நாயனார் 

விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கொடும்பாளூரில் அவதரித்த இடங்கழியார் ஆட்சி காலத்தில் அடியார்களுக்கு திருவமுது செய்திக்கும் திருத்தொண்டர் ஒருவர் திருவமுதிற்குரிய  பண்டங்கள் கிடைக்காமல் திண்டாடினார்.

மனம் வருந்திய அவர் திருவமுயதிற்குரிய அரிசியைப் பெற வேண்டி இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து நெற்கூடத்திலிருந்து நெல்லை திருட காவலர்கள் அவரை பிடித்து கட்டி இடங்கழியாரின் முன் நிறுத்தினர்.

இடங்கழியார் அடியாரைக் கண்டு நடந்ததைக் கேட்க, அதற்கு அடியார் சிவனடியார்களுக்கு நான் திருவமுது செய்திருக்கும் தொழில் முட்டுப்பட்டமையால் இவ்வாறு செய்தேன் என்று கூறினார். இதை கேட்டு இடங்கழியார் அடியாரை காவலினின்றும் விடுவித்து சிவனடியார்கள் நெற்ப்பண்டாரம் மட்டுமின்றி மற்றைய நிதிகளின் பண்டாரங்களாகிய எல்லாவற்றையும் தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதித்தார்.இச்செயலால் இவர் இடங்கழி நாயனார் என போற்றப்பட்டார்.

Comments