63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -56 புகழ்த்துனை நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 56
புகழ்த்துனை நாயனார் 

கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள செருவிலிப்புத்தூரில் அவதரித்த புகழ்த்துனையார் தினமும் சிவபெருமானுக்கு அகம் படிமை தொண்டு புரிந்து வந்தார்.

உலகில் பஞ்சம் ஏற்பட பசியால் வாடிய புகழ்துணையார் "எமது பெருமானை விடுவேன் அல்லேன்" என்று மலர்களைக் கொண்டும், நீரினைக் கொண்டும் பூசித்து வந்தார் ஒருநாள் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் ஆட்டும் பொழுது பசியால் தளர்ந்து திருமஞ்சன கூடத்தை கைதவறி சிவபெருமானின் திருமுடி மீது வீழ்த்தி சோர்ந்து விழ, அப்பொழுது இறையருளால் சற்று உறக்கம் கொள்ள ஈசன் கனவில் தோன்றி "இப்பஞ்சம் தீரும்வரை இப்பீடத்தின் கீழ் உனக்கு நாள்தோறும் ஒரு பொற்காசு வைப்போம் அதை நீ பெற்றுக் கொள்வாயாக" என்று கூற விழித்தெழுந்த புகழ் துணையார் பொறுக்காசையை கண்டு மகிழ்ந்தார். இவ்வாறு இறைவன் நாள்தோறும் அளித்த பொற்காசுகளை கொண்டு அகம்படிமை தொண்டு செய்து புகழ் துணையின் நாயனராக போற்றப்பட்டார். 

Comments