63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -57 கோட்புலி நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 57
கோட்புலி நாயனார் 

திருவாரூர் அருகே அமைந்துள்ள திருநாட்டியதான்குடி எனும் ஊரில் அவதரித்து செந்நெல் சேமித்து சிவாலயங்கள் தோறும் உணவு வழங்கும் பணியாற்றி வந்த கோட்புலியார் போருக்கு செல்ல வேண்டி இருந்ததால் தனது சுற்றத்தாரிடம் இந்நெல் எம்பெருமானுக்குரியது யாரும் பயன்படுத்தக் கூடாது என கூறிச் செல்ல...


 அவ்வேலையில் பஞ்சம் வர சுற்றத்தார் நெல்லை பயன்படுத்தினர் போரில் வென்று திரும்பிய கோட்புலியார் உண்மையரிந்து தன் உறவினர்களை எல்லாம் மாளிகைக்கு அழைத்து அவர்களை நிற்கும்படி கட்டளையிட்டு தாய், தந்தை உட்பட அனைவரையும் இறை நெல் எடுத்ததற்காக வெட்டி வீழ்த்தினார்...

 இறுதியில் ஒரு குழந்தையை வட்ட முயலும் போது காவலாளி குழந்தை நெல்லை உண்ணவில்லை என்று கூற... 

 இந்த குழந்தை நெல்லை உண்ட பெண்ணின் பாலமுதை உண்டல்லவா?  என்று கூறி வெட்ட இறைவன் தோன்றி கோட்புலியாருக்கு காட்சியளித்து அனைவரையும் உயிர்ப்பித்தார்🙏🙏🙏

Comments