63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -62 முப்போதும் திருமேனி தீண்டுவார்கள் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
 பகுதி - 62 
முப்போதும் திருமேனி தீண்டுவார்கள் 

உயிர்களிடத்து எக்காலத்திலும் அன்பு கொண்டவராகிய சிவபெருமானை சிவ ஆகம விதிமுறைகள் தவறாத வண்ணம் ஆசையும், அன்பும் பெருக, காலை, நண்பகல், மாலை என்ற மூன்று காலத்திலும் அர்ச்சனை செய்பவர்கள் ஆதி சைவ முனிவர்கள் ஆவார்கள்

 முன்கூறிய மூன்று காலத்திலும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆக மூன்றாக வகுக்கப்படும் எக்காலத்திலும் வழிவழியாக அர்ச்சனை செய்யும் திருத்தொண்டானது சிவ வேதியர்களுக்கு உரியதாகும்.

 சிவாலயத்தில் விதிமுறைப்படி பூஜை செய்யும் சிவாச்சாரியார்களே முப்போதும் திருமேனி தீண்டுவர் எனப்படுவர் இவர்கள் அதிகாலையில் நீரில் மூழ்கி நீராடுவர். திருநீறு பூசிக் கொள்வர் சத்தியா வந்தனம் செய்வர் சிவலிங்கம் முதலான திருமேனிகளை முப்பதும் தீண்டி பூசை புரிவர் இவர்களை முப்பதும் திருமேனி தீண்டுவார் ஆவர் 🙏

Comments