63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 65 - பூசலார் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -65
பூசலார் நாயனார் 

சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநின்றவூரில் அவதரித்த பூசலார் நீண்ட நாட்களாக அவ்வூரில் சிவபெருமானுக்கு ஒரு கோவிலை கட்ட எண்ணினார்.

அதற்குரிய பொருட்கள் கிடைக்காததால் தன் மனதிற்குள்ளே கோயிலை கட்டி பின்னர் தன் மனத்தால் கட்டிய கோயிலில் சிவபெருமானை ஸ்தாபிக்க நல்ல வேலையும் குறிப்பிட்டார்.

இது இவ்வாறு இருக்க மன்னர் கழற்சிங்கர் காஞ்சிபுரத்தில் கற்கோயில் கட்டி அதில் சிவபெருமானை ஸ்தாபிக்க ஒரு நாளையும் நேரத்தையும் நியமிக்க...

 அதற்கு முதல் நாள் சிவபெருமான் கழற்சிங்கரின் கனவில் தோன்றி திருநின்றவூரில் பூசலார் கட்டிய ஆலயத்தில் புகுவோம் ஆதலால் உனது ஆலய பிரதிஷ்டியை வேறொரு நாள் வைத்துக் கொள் என கூற....

 மன்னர் பூசலார் வீட்டிற்கு சென்று வணங்கி நீங்கள் கோயில் கட்டி இருப்பதை எம்பெருமான் கனவில் சொன்னார் என்று கூற பூசலரும் தன் மனக் ஆலயத்தில் சிவபெருமானை ஸ்தாபித்து பூசை எல்லாம் செய்து சிவனருள் பெற்றதால் பூசலார் நாயனார் எனப்பட்டார் 🙏 

Comments