63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 66 - மங்கையர்க்கரசியர் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி - 66
மங்கையர்க்கரசியர் 

கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள பழையாறை வடதளி எனும் ஊரில் அவதரித்த மங்கையர்கரசியார் பாண்டிய மன்னன் நின்று சீர் நெடுமரனை மணந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்.

அச்சமயத்தில் நெடுமாறன் சமணர்களால் மனமாற்றம் செய்யப்பட்டு சமண மதத்தை பரப்பி வந்தார். சைவ மரபில் தழைத்தோங்கிய மங்கையர்கரசியார் தன் கணவரை மீண்டும் சைவ சமயத்திற்கு வரச் செய்ய முயற்சித்தார். எனினும் எந்தப் பயனும் இல்லை.

ஆயினும் தன்னால் இயன்ற அளவு சிவனடியார்களுக்கும், சிவாலயங்களுக்கும் தொண்டும் புரிந்து வந்தார். அந்நிலையில் திருஞானசம்பந்தர் மன்னர் மாளிகைக்கு வர மங்கையர்க்கரசியார் அன்புடன் வரவேற்று கணவன் நெடுமாறரை சந்திக்க வைத்தார்.

திருஞானசம்பந்தரின் தத்துவார்த்த விளக்கத்தையும், உரையாடல்களையும் கேட்டு நெடுமாறர் சமணத்தை விடுத்து மனம் மாறி சைவம் தழைத்தோங்க பாடுபட்டார்.

தன் கணவரை சைவராக மாற்றிய திருத்தொண்டினால் மங்கையர்கரசியாரும் நாயனராக போற்றப்பட்டார் 🙏

 


Comments