63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 67 நேச நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி - 67
நேச நாயனார் 

ஆந்திர மாநிலம் காம்பிளி எனும் ஊரில் அவதரித்த நேசர் நெசவுத்தொழில் சிறந்தவர் ஆயினும் சிவனடியார்களின் திருவடிகளை தலையில் வைத்து ஆடித் துதிக்கும் அன்புடையவராகவும் விளங்கினார்.

நேசர் தம் மனத்தில் செயல் அனைத்தையும் சிவபெருமானது திருவடி தாமரைக்காக ஆக்கினார். தம் வாக்கின் செய்கையினை திருமந்திரமாக்கிய திருவைந்தெழுத்திற்காக ஆக்கினார். தாம் மேற்கொள்ளும் கைத்தொழிலின் செய்கையினை சிவனடியார்களுக்காக ஆக்கும் வகையில் ஆடை நெய்து சிவனடியார்கள் வேண்டிய படியே அளித்து வந்தார்.

இதுபோன்று சிவனடியார்கள் விரும்பியவாறு ஆடையும் கீழும் கோவணமும் இடையராமல் கொடுத்து நாள்தோறும் அவர்களுடைய திருவடிகளை வணங்கி துதித்து நன்மையை பெற்று சிவபெருமானது திருவடி நலனை அடைந்தார் இவ்வாறு சிவத்தொண்டு செய்ததின் பொருட்டு சான்றோர்கள் நேசரை நேச நாயனார் என அழைத்தனர் 🙏  

Comments