63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 68 கோச்செங்கட் சோழ நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி - 68
கோச்செங்கட் சோழ நாயனார் 

திருவானைக்காவலில் ஒரு வெண் நாவல் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தை ஒரு யானை தன் துதிக்கையால் திருமஞ்சனமாட்டி  பூச்சூடி வழிபட்டு வர, இத்தளத்தில் ஒரு சிலந்தி ஈசன் திருமுடியின் மேல் வெப்பம் படாதிருக்க பந்தல் செய்தது.

 இதை கண்ட யானை அச்சிலந்தியின் வாயில் உள்ள எச்சியால் உருவானது அப்பந்தல் என்ற எண்ணி அதனை அழிக்க சிலந்தி கோபம் கொண்டு யானையின் துடிக்கையினுள் புகுந்து கடிக்க வலி தாங்காமல் யானை துதிக்கையை தரையில் அடிக்க யானையும் சிலந்தியும் இறந்தன.

 இரண்டுமே சிவனை துதித்தல் பொருட்டு மோதலில் இருந்ததால் ஈசன் யானைக்கு முக்தியும், சிலந்தியை சுபதேவர், கமலவதியாருக்கு மகனாக பிறக்கும் அருளினார்.

அக்குழந்தை கோட்செங் கண்ணனாக வளர்ந்தது. மேலும் கோட் செங்கண்ணன் திருவானைக்காவில் தர்ம திருவருள் பெற்று வெண்ணாவல் மரத்துடன் கோயில் கட்டி சிவ தொண்டு புரிந்ததால் நாயனராக போற்றப்பட்டார் 🙏

Comments